1. Home
  2. கோலிவுட்

19 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை.. டூப் போட்டு அவர் இடத்தை பிடித்த தொடையழகி ரம்பா

19 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை.. டூப் போட்டு அவர் இடத்தை பிடித்த தொடையழகி ரம்பா

தனது 14 வயதில் நடிக்க வந்து தனது அழகால் இந்திய சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் தான் மறைந்த நடிகை திவ்யா பாரதி. 1993 ஆம் ஆண்டு, தனது 19வது வயதில் தான் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட திவ்யா பாரதியின் மரணம் இன்று வரை பலருக்கும் பெரும் மர்மமாகத்தான் தான் உள்ளது.

ஒரு சிலர் திவ்யா பாரதியின் காதலர் அவரை விட்டு சென்றதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது திரை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர ஒருசிலர் அவருக்கு அதிகமான மன அழுத்தம் கொடுத்ததாகவும் செய்திகள் உலா வந்தன.

இதனிடையே 1995-ஆம் ஆண்டு தமிழில் வெளியான இளம் நெஞ்சே வா என்ற திரைப்படத்தில் பிரஷாந்துடன் திவ்யபாரதி நடித்து வந்தார். 1993 ஆம் ஆண்டு திவ்யபாரதி அப்படத்தின் 80% படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், திடீரென அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரைப் போலவே ஒரு நடிகையை தேர்ந்தெடுத்து அப்படத்தில் நடிக்கவைத்தார் இயக்குனர்.

அவர் தான் நடிகை ரம்பா, அப்படத்தில் திவ்யபாரதி இல்லாத கதாபாத்திரங்களில் ரம்பாதான் டூப்பு போட்டு நடித்திருப்பார். அதன்பின் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரம்பா தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அவரின் மார்க்கெட் எங்கோ உயர்ந்தது.

தமிழையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி என பல மொழிகளில் நடித்த ரம்பா இன்றுவரை ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகை என சொல்லலாம். இவரது தொடை அழகிற்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். தனது தொடையை எத்தனையோ லட்சங்கள் கொடுத்து இன்சூரன்ஸ் செய்த நடிகை என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.

19 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை.. டூப் போட்டு அவர் இடத்தை பிடித்த தொடையழகி ரம்பா
divya-bharathi

அப்படிப்பட்ட ரம்பாவின் ஆரம்ப காலகட்டத்தில் மறைந்த நடிகை திவ்யபாரதிக்கு டூப்பு போட்டு தான் அவர் இந்த நிலைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ரம்பா தனது மூன்று பிள்ளைகளுடன் குடும்பத்துடன் செட்டிலாகி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.