செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நூலிழையில் உயிர் தப்புவாரா ரஞ்சிதாவின் மாஸ்டர்.? இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரின் ஓட்டிங் லிஸ்ட்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஒவ்வொரு நாளும் அடிதடி சண்டைக் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் காரசாரமாக ஒளிபரப்பாகிறது. இருப்பினும் ஒவ்வொரு வார இறுதி நாட்களில் ஒரு போட்டியாளரை ஆண்டவர் மக்கள் ஓட்டின் அடிப்படையில் வெளியேற்றுவார்.

அப்படி இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் அசீம், ஜனனி, தனலட்சுமி, கதிரவன், குயின்ஸி, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் சீரியல் நடிகரான அசீம் ஒவ்வொரு வாரமும் சகப் போட்டியாளர்களுடன் மோதிக் கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்குவதால் அவருக்குத்தான் அதிக ஓட்டுகள் கிடைத்து முதலிடத்தில் இருக்கிறார்.

Also Read: அசல் கோலாறால் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு.. கடும் கோபத்தில் ஷங்கர்

செம க்யூட் ஆகவும் இலங்கைத் தமிழில் செல்லமாகவும், சிறப்பாக விளையாடும் ஜனனி 2ம் இடத்தில் இருக்கிறார். அதேபோல் மக்கள் அளித்த ஓட்டில் கதிரவன் 3ம் இடத்தையும் தனலட்சுமி, குவின்ஸி, ஆயிஷா அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். கடைசி இரண்டு இடத்தில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் இருவரும் உள்ளனர்.

இதில் நிவாஷினி இந்த வாரம் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து எந்த விவாதத்திலும் ஈடுபடாமல் உப்புக்கு சப்பாணியாக இருப்பது போல் ரசிகர்களுக்கு தோன்றுகிறது.

Also Read: வாடி போடி, நீ என்ன பெரிய இவளா குழாயடி சண்டையாக மாறிய பிக்பாஸ் வீடு.. தனலட்சுமி டார்கெட் செய்த அடுத்த நபர்

ஆகையால் அவருக்கு குறைந்த வாக்குகளை அளித்து இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற பார்க்கின்றனர். அதேசமயம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் சீரியல் நடிகை ரக்ஷிதாவிற்கு ரூட் போடும் வேலையை மட்டுமே சரியாக பார்த்துக் கொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டரும் பிக் பாஸ் ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்கிறார்.

மேலும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் நிவாஷினி இருவருக்கும் குறைந்த வாக்கு வித்தியாசமே இருப்பதால் இவர்களுள் ஒருவர்தான் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் யார் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 பிக் பாஸ் சீசன் 6 இந்த வார ஓட்டிங் லிஸ்ட்

bb6-cinemapettai
bb6-cinemapettai

Also Read: விஜய் டிவியால் சாவின் விளிம்பிற்கு செல்லும் காமெடி நடிகர்கள்.. செஞ்சாலும் குத்தம் செயலானாலும் குத்தமா!

Trending News