1. Home
  2. கோலிவுட்

வாரிசை அடுச்சு தூக்க நாள் குறித்த துணிவு.. அவசரப்பட்டு வாய்விட்டு விட்டோமோ என பயத்தில் தளபதி விஜய்

வாரிசை அடுச்சு தூக்க நாள் குறித்த துணிவு.. அவசரப்பட்டு வாய்விட்டு விட்டோமோ என பயத்தில் தளபதி விஜய்
விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களின் ரிலீஸ் தேதி இணையத்தில் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் மற்றும் அஜித் படங்கள் பலமுறை ஒரே நாளில் போட்டி போட்டு வெளியாகி உள்ளது. ஆனால் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் மோதிக்கொள்ள உள்ளது.

முதலில் தமிழ், தெலுங்கு என இரு மொழியில் உருவாகி இருக்கும் வாரிசு படம் பொங்கல் பண்டிகையில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் தான் பண்டிகையில் வெளியாகும் என்ற ஒரு சட்டம் அங்கு உள்ளதாம். இதனால் தெலுங்கில் வாரிசு படத்துக்கு குறைந்த திரையரங்குகள் தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் பொங்கல் பண்டிகைக்கு வாரிசை வெளியிடுவதில் விஜய் உறுதியாக இருந்தார். இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. வாரிசை அடித்து நொறுக்க ஒரு நாள் முன்னதாகவே துணிவு படம் வசூல் வேட்டையாட திரையரங்குக்கு வருகிறது.

அதாவது ஜனவரி 11ஆம் தேதி புதன்கிழமை துணிவு படம் வெளியாகிறது. இதற்கு அடுத்த நாள் ஜனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமை விஜயின் வாரிசு படம் வெளியாக உள்ளது. எப்படியும் துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என்ற தைரியத்தில் வாரிசு படக்குழு இருந்தனர்.

இப்போது வாரிசு படத்திற்கு முன்னதாகவே துணிவு படம் வெளியாவதால் இந்த படம் தான் அதிக வசூல் செய்யும். இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தால் அடுத்ததாக வாரிசு படத்தின் வசூல் பாதிக்குமோ என்ற பயம் வாரிசு படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாள் இடைவெளியில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் உள்ளனர். இதுதான் இந்த வருஷத்தின் தீபாவளி என விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாட உள்ளனர். மேலும் இவர்களால் இணையதளம் என்ன ஆகுமோ என்ற பயமும் சிலருக்கு உள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.