ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஜனனி கன்னத்தை ஆசையாக கிள்ளிய போட்டியாளர்.. பிக்பாஸுக்கு கிடைத்த அடுத்த கன்டென்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூர மொக்கையாக போய்க்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்கள் அனைவரும் தற்போது வீட்டிற்கு வெளியே இருப்பது தான்.

அந்த வகையில் அசல் கோலார் நிகழ்ச்சியில் பெண்களிடம் ஏதாவது ஒரு கோளாறு செய்து கொண்டு கன்டென்ட் கொடுத்து வந்தார். இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பியும் எக்கச்சக்கமாக உயர்ந்தது. ஆனால் குறைந்த ஓட்டுகளை பெற்று அவர் எலிமினேட் செய்யப்பட்டார். அதே போன்று வாயாடி மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி ஆகியோரும் நிகழ்ச்சியில் பரபரப்பை கிளம்பி வந்தனர்.

Also read: பிக் பாஸுக்கு பின் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தாமரை.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்ன தெரியுமா?

குயின்சி விளையாட்டில் அதிக அளவில் சுவாரசியம் காட்டவில்லை என்றாலும் கதிரவனுடன் அவர் செய்த கலாட்டாக்கள் ரசிக்கும் படி இருந்தது. இப்படி கன்டென்ட் கொடுக்கும் அனைவரையும் கழுத்தை பிடித்து துரத்திவிட்ட விஜய் டிவி தற்போது அடுத்த கன்டென்ட்டுக்கு திண்டாடி வருகிறது. அதனால் விஜய் டிவி பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு காதல் ஜோடியை உருவாக்கியுள்ளது.

அதாவது இவ்வளவு நாள் வீட்டுக்குள் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த ராம் இந்த வாரம் ஓரளவுக்கு பர்பாமென்ஸ் செய்து வருகிறார். அதிலும் ரகுவரன் கெட்டப் போட்டிருக்கும் அவரின் மேனரிசம் ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்து விட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் தனியாக அமர்ந்திருந்த ஜனனியிடம் அவர் கடலை போட்டுக் கொண்டிருந்தார்.

Also read: டிஆர்பி-யில் விஜய் டிவிக்கு தண்ணி காட்டும் சன் டிவி.. கிளைமாக்ஸ் காட்சியை வைத்து முன்னேறிய பாரதிகண்ணம்மா

அப்போது அவர் ஜனனி சோகமாக இருந்ததை குறிப்பிட்டு பேசினார். அதைக் கேட்டு நான் வடிவாக இல்லையா, அதாவது அழகாக இல்லையா என்று ஜனனி குறைபட்டுக் கொண்டார். உடனே அவரை சமாதானம் செய்யும் பொருட்டு ராம் நீ ரொம்ப வடிவா இருந்த என்று கூறி கன்னத்தை வேறு பிடித்து செல்லமாக கிள்ளினார். இதனால் குஷியான ஜனனி வெட்கப்பட்டுக் கொண்டே ஒரு சிரிப்பு சிரித்தார்.

இதை பார்க்கும் போதே இவ்வளவு நாள் மிக்சர் சாப்பிட்டு வந்த ராம் மனதில் ஒரு பட்டாம்பூச்சி பறந்து விட்டது என்று நன்றாக தெரிகிறது. அதனால் இதை வைத்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் சில வாரங்கள் ஓட்டி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு இவர்களின் மூலம் ஒரு புது கன்டென்ட் கிடைத்துவிட்டது என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Also read: அமுதவாணனை பார்த்து அருவருப்பு படும் ஹவுஸ் மேட்ஸ்.. வீட்டுக்குள் சாப்பாடு கூட போடாமல் செய்த கேவலமான நிகழ்வு

Trending News