1. Home
  2. கோலிவுட்

பொன்னியின் செல்வனுக்கு முந்திக்கொண்ட ரஜினி.. ரணகளமாக வெளியான ஜெயிலர், இந்தியன் 2 பட ரிலீஸ் தேதி

பொன்னியின் செல்வனுக்கு முந்திக்கொண்ட ரஜினி.. ரணகளமாக வெளியான ஜெயிலர், இந்தியன் 2 பட ரிலீஸ் தேதி

இந்த வருடம் வரலாற்று கதையம்சம் கொண்ட பொன்னியின் செல்வன் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2023ம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக பட குழு தீர்மானித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், அவரின் அடுத்த படமான ஜெயிலர் படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார். அதிலும் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவித்த பின் உடனே முந்திக்கொண்டு பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ரிலீஸ்க்கு முன்பே, ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை குறித்திருக்கிறார். முதல் பாகம் பல மாதங்களாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்ததால் ஒருவேளை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் வசூல், ஜெயிலர் படத்தின் வசூலை பாதித்துவிடக் கூடாது என்பதற்காகவே ரஜினி முந்தி கொண்டார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதேபோன்று சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், காஜல் அகர்வால், பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியன் திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இந்த படத்தின் 2ம் பாகத்தை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. பல பாராட்டத்திற்கு பின்பு படத்தை எடுத்து முடிக்கும் தருவாயில் இருக்கும் படக்குழு, இந்தியன் 2 படத்தை வரும் ஜூன் 2-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். எனவே இந்த வருடத்தின் தொடக்கத்தில் தல தளபதியின் துணிவு, வாரிசு ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் பிறகு, இந்தியன் 2 என வரிசையாக அடுத்த வருடம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது. அதிலும் தற்போது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிந்தபின் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சந்தோஷத்தில் சோசியல் மீடியாவை ரணகளம் செய்து கொண்டிருக்கின்றனர்.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.