வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கண்ணம்மா உனக்கு எண்டே இல்லையா.. மீண்டும் புதிய பாரதியுடன் தொடங்கிய 2ம் பாகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா தொடர் ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதாவது அருண் மற்றும் ரோஷினி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா நடித்து வந்தார்கள். ஆரம்பத்தில் இவர்கள் இடையே ஆன காதல் காட்சிகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இதை தொடர்ந்து ரோஷினிக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்ததால் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை பாரதிகண்ணம்மா தொடர் இனிதே முடிவற்றது.

Also Read : ஓவர் குடி, குக் வித் கோமாளி அரங்கில் மட்டையான போட்டியாளர்.. உடனே தூக்கிட்டு விஜய் டிவி பிரபலத்திற்கு வாய்ப்பு

ஒரு வழியாக இப்போதாவது பாரதி கண்ணம்மா தொடருக்கு எண்டு கார்ட் போட்டீர்களே என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தார்கள். ஆனால் இரண்டு நாட்கள் கூட அந்த சந்தோஷத்தை அனுபவிக்க விடாமல் இயக்குனர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது பிப்ரவரி 6 ஆம் தேதியான இன்றிலிருந்து பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் வினுஷா தேவி எனக்கு எண்டே கிடையாது என்று மீண்டும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடிக்கிறார். ஆனால் பாரதியாக இந்த முறை அருண் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக சன் டிவி ரோஜா சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்ற சிபு சூரியன் நடிக்கிறார்.

Also Read : காந்தாரா படத்தையும் விட்டு வைக்காத விஜய் டிவி.. இதெல்லாம் ஒரு பொழப்பு, ராஜா ராணி 2 வில் நடக்கும் அட்டூழியம்

ரோஜா தொடரின் முடிவுக்குப் பிறகு சிபு சூரியனை மீண்டும் சின்னதிரையில் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் மகிழ்விக்க வருகிறார். பாரதியின் அம்மாவாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்த ரூபாஸ்ரீ இந்த தொடரிலும் அதே கதாபாத்திரத்தில் பயணிக்கிறார்.

மேலும் கண்ணம்மாவின் அம்மாவாக சின்னத்திரை நடிகை தீபா நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார் என்று இன்று ஒளிபரப்பாகும் தொடரில் தெரியவரும். பாரதி கண்ணம்மா 2 தொடர் வருவதில் மகிழ்ச்சியை விட அதிர்ச்சியில் தான் பெரும்பாலான சீரியல் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் பிரபல சேனல்.. புதிய சீரியல்களை தரையிறக்கியதால் திண்டாடும் விஜய் டிவி  

Trending News