1. Home
  2. கோலிவுட்

ஜெயிலர் படத்தில் வந்த காசை சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா.? பலரையும் கலங்க வைத்த சம்பவம்

ஜெயிலர் படத்தில் வந்த காசை சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா.? பலரையும் கலங்க வைத்த சம்பவம்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்திலிருந்து வந்த பணத்தை சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் கோலிவுட்டிங் டாப் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன், சிறுவயதில் தந்தை இல்லாமல் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் அவ்வப்போது அவர் கண் முன் வந்து கண்கலங்க வைக்குமாம்.

இதனால் தற்போது அவர் செய்திருக்கும் மகத்தான காரியம் பலராலும் பாராட்டப்படுகிறது. சிவகார்த்திகேயன் இன்று ஆலமரம் போல் சினிமாவில் வளர்ந்திருக்கிறார். இவர் தன் திறமையால் இன்று எட்டாத உயரத்தை அடைந்திருக்கிறார்.

சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என ஆல்ரவுண்டர் போல் அனைத்தையும் சாதித்து வருகிறார். இப்பொழுது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்திற்காக ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.

அந்த பாடலில் வரும் காசுகளை கூட மறைந்த பாடல் ஆசிரியர் நா முத்துக்குமாரின் குடும்பத்திற்கு வழங்கி விட்டார். காதல், தாலாட்டு, வலி, அழுகை, ஆனந்தம் என அனைத்திற்கும் நா முத்துக்குமாரின் பாடல் வரிகள் எனர்ஜி டானிக்காக இருக்கும். இதனால் இவர் தங்க மீன்கள் மற்றும் சைவம் போன்ற இரண்டு படங்களுக்காக இரு முறை தேசிய விருதுகளை வென்றார்.

இப்படி தன்னுடைய பாடல் வரிகளால் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த நா முத்துக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் முற்றிய நிலையில் திடீரென்று இயற்கை எய்தினார். இவருடைய மரணம் ரசிகர்களை மட்டுமல்ல அவருடைய குடும்பத்தையும் உலுக்கியது.

அப்போது சிவகார்த்திகேயன் முத்துக்குமாரின் மறைவுக்கு சென்ற பொழுது அங்கே அவரது குழந்தைகள் விவரம் தெரியாமல் அழுது கொண்டு இருந்தார்களாம். அந்த குழந்தைகள் மாதிரி இருக்கும்போது சிவகார்த்திகேயனும் அவர் தந்தை இழந்து விட்டாராம். இதனால் இன்று வரை அந்த குடும்பத்திற்காக உதவி செய்து கொண்டிருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.