எனக்கு அப்புறம் நீ தான்.. நண்பனின் உயிரைக் காப்பாற்ற தேங்காய் சீனிவாசன் செய்த உருக்கமான செயல்

இதுவரை எத்தனையோ பேர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தோன்றி மறைந்திருந்தாலும் ஒரு சிலரை நம்மால் மறக்கவே முடியாது. அவர்கள் எப்பொழுதுமே நம் ஞாபகத்தில் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் தான் தேங்காய் சீனிவாசன். இவரது படங்களில் இவருடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்றால் எந்த அளவுக்கு சிரிக்க வைக்க முடியுமோ அதை சரியாக செய்து மக்களை சிரிக்க வைக்கக் கூடியவர்.

இவருடைய காமெடிக்கு அப்பாற்பட்டு பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அத்துடன் வில்லன் கேரக்டருக்கும் மிகவும் கச்சிதமாக பொருந்தக் கூடியவர். இப்படி இவரின் திறமைகளை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாகவே ஹீரோகளுக்கு ஒரு திருப்புமுனையாக ஒரு சில படங்கள் அமையும். அதேபோல் இவருடைய காமெடிக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது தான் தில்லு முல்லு திரைப்படம்.

Also read: எம்ஜிஆர் மீது அளவுகடந்த நட்பு.. பட வாய்ப்பை இழந்து தேங்காய் சீனிவாசன்

இந்த படத்தில் ரஜினி செய்யும் தில்லுமுல்லு அனைத்தும் அறியாமல் வெகுலியாக ஏமாறும் கதாபாத்திரத்தில் நடித்தது மற்றவர்களை ரசிக்கும் படியாக அமைந்திருக்கும். அத்துடன் இவர் நடிப்பிற்கு அப்பாற்பட்டு மற்றவர்களிடம் பழகுவதிலும் மிகவும் மென்மையானவர். அது மட்டுமில்லாமல் அந்த காலத்தில் நட்புக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில் இவரை அடிச்சுக்க ஆளே கிடையாது.

அந்த வகையில் இவரைப் பற்றி மிகவும் பெருமையாக நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி கூறியிருக்கிறார். அதாவது இவருக்கு இருதய சிகிச்சை நடந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இவருக்காக பிரார்த்தனை செய்து திருப்பதி வரை நடந்தே சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தாராம்.

Also read: தில்லு முல்லு படத்தின் உண்மையான ஹீரோ ரஜினி இல்லையாம்.. பிரபல பத்திரிக்கை வெளியிட்ட ரகசியம்

அதன் பின் உனக்கு ஒன்றும் ஆகாது அந்த பெருமாள் உனக்கு துணையாக இருப்பார் அதற்காக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அத்துடன் எனக்கு அப்புறம் நீ தான் இருக்கணும் என்று சொல்லி இருக்கிறார். நட்புக்கு உதாரணமாக இவர்களுக்குள் நடந்த சம்பவத்தையும் கூறி மிகவும் கண்கலங்கி பேசி இருக்கிறார்.

சினிமாவில் ஒரு நடிகருக்கும் மற்றொரு நடிகருக்கும் போட்டி இருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒரு ஆழமான நட்பு இருந்துள்ளதை கேட்கும் பொழுது நம்மளை புல்லரிக்க வைக்கிறது. இப்பொழுது உள்ள காலங்களில் இந்த மாதிரி ஒரு நட்பு வட்டாரத்தை பார்க்கவே மிகவும் அபூர்வமாக இருக்கிறது.

Also read: இந்த ஒரு ஆசையால் நடுத்தெருவுக்கு வந்த தேங்காய் சீனிவாசன்.. திட்டித் தீர்த்துவிட்டு எம்ஜிஆர் செய்த காரியம்