1. Home
  2. சினிமா செய்திகள்

சாகுந்தலம் மூலம் கம்பேக் கொடுத்தாரா சமந்தா.. படம் எப்படி இருக்கு?

சாகுந்தலம் மூலம் கம்பேக் கொடுத்தாரா சமந்தா.. படம் எப்படி இருக்கு?
சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் சாகுந்தலம் படம் முழு விமர்சனம்.

சமந்தா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க முடியாது என காது பட பலர் பேசி இருந்தனர். ஆனால் அதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத சமந்தா, தான் சிகிச்சை பெற்று மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியாகி உள்ளது. குணசேகரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் புராண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் காதல் கதையை சாகுந்தலம் படம் எடுக்கப்பட்டது.

விசுவாமித்திரர் மற்றும் மேனகை இருவருக்கும் பிறந்த குழந்தையான சகுந்தலா அதாவது சமந்தா காடுகளில் விலங்கு உடன் வாழ ஆரம்பிக்கிறார். அப்போது அங்கு வந்த துஷ்யந் மீது சகுந்தலம் காதலில் விழுகிறார். இருவரும் பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.

தனது நாட்டிற்கு சகுந்தலாவை அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு துஷ்யந் செல்கிறார். ஆனால் ஒரு முனிவரின் சாபத்தால் துஷ்யந் சகுந்தலா உடன் பழகிய அனைத்து விஷயங்களையும் மறந்து விடுகிறார். மேலும் சகுந்தலா துஷ்யந்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

கடைசியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் சாகுந்தலம் படத்தில் கதை. அதாவது இந்த படம் ஹிந்தியில் ராமாயணம், மகாபாரதம் போன்ற சீரியல்கள் போல் இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள். அதுவும் முதல் பாதி மிகவும் மெதுவாக செல்வதாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் விஎப்எக்ஸ் காட்சிகளும் மிகவும் மோசமாக எடுத்து உள்ளனர். மொத்ததில் படத்தில் நிறைய சொதப்பல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தேவ் மோகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் சமந்தாவின் அழகுக்காக மட்டுமே சாகுந்தலம் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.