பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விக்ரம் காட்டுவாசி போல் காட்சியளிக்கிறார். இந்நிலையில் நேற்று விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படம் உருவான மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருந்தது.
இதைப் பார்த்த ரசிகர்கள் ராஜமௌலியின் பாகுபலி பட சாயலில் இருப்பதாக கூறி வந்தனர். பாகுபலி படத்தில் இதே போல் காட்டுவாசிகள் இருக்கும் காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இதற்கு ரசிகர்கள் பாகுபலி படத்தை தான் பா ரஞ்சித் காப்பியடித்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
Also Read: உயிரைக் கொடுத்து நடிச்சும் பிரயோஜனம் இல்லாமல் போன விக்ரமின் 5 படங்கள்.. சியானை பதம் பார்த்த கோப்ரா
ஆனால் பா ரஞ்சித்தின் முந்தைய படங்களை எடுத்துப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடும் கதைக்களமாக தான் இருக்கும். மேலும் தங்கலான் படத்திலும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் தடைசெய்யப்பட்ட வரலாற்றைக் காட்டுகிறது. ஆனால் பாகுபலி படத்தில் வேறு மாதிரி சித்தரிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் பாகுபலி படத்தில் தாழ்த்தப்பட்ட சமூகங்களை கொடூரமான மற்றும் மனிதாபிமானம் மற்றவர்களாக ராஜமவுலி காட்டி இருந்தார். மேலும் பா ரஞ்சித் அந்த காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை தான் படமாக எடுத்து வருகிறார். இதேபோல் ஒடுக்கு முறையால் அவர்கள் ஒதிக்கி வைக்கப்பட்டு இருந்தனர்.
Also Read: 57 வயதில் விக்ரமின் அசர வைக்கும் சொத்து மதிப்பு.. தோல்வி துரத்தினாலும் வருடத்திற்கு இவ்வளவு சம்பளமா?
அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக பா.ரஞ்சித் தொடர்ந்து தனது பாணியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தங்கலான் படமும் ஒரு சரித்திரத்தை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் சீயானுக்கு இப்படம் டேனிங் பாயிண்டாக அமைய உள்ளது.
பாகுபலி படத்தையே ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களும் பார்க்க வேண்டிய படம் தங்கலான். மேலும் இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு மே மாதத்திற்குள் நிறைவு பெற இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கலான் படம் ரிலீஸாக இருக்கிறது.
Also Read: மருதநாயகத்தை மிஞ்சிய விக்ரமின் தங்கலான் வீடியோ.. காட்டுவாசியாக வேட்டையாட வைத்த பா ரஞ்சித்