பண்டிகை என்றால் இளசுகள் திரையரங்கில் தான் முன்னணி நட்சத்திரங்களின் படங்களை பார்த்து ரசித்து கொண்டாடுவார்கள். ஆகையால் அப்படிப்பட்ட நாட்களை குறி வைத்து தான் டாப் நடிகர்களின் படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகும். அப்படித்தான் இந்த வருட துவக்கத்திலேயே விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற 2 படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகி திரையரங்குகளை ஆரவாரம் செய்தது.
ஆனால் நிச்சயம் ஒரு படத்தின் வசூல் இன்னொரு படத்தின் வசூலை பாதித்திருக்கும். இதனால் தற்போது போட்டியே இல்லாமல் உச்ச நட்சத்திரங்களின் 5 படங்கள் வெவ்வேறு பண்டிகைகளை குறி வைத்து ரிலீஸ் ஆகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் ஜெயிலர் படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகிறது.
அதன் தொடர்ச்சியாக தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி ஆன ஆயுத பூஜை அன்று ரிலீஸ் ஆகிறது. அதை போல் முழு நேர அரசியலில் ஈடுபட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் திரைப்படம் பக்ரீத் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.
அதேபோல் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அது மட்டுமல்ல துணிவு படத்திற்கு பிறகு தல அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் ஏகே 62 திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு இந்த 5 உச்ச நட்சத்திரங்களும் தங்களுடைய படங்களின் வசூலை சிந்தாமல் சிதறாமல் தட்டி தூக்க வேண்டும் என்று வெவ்வேறு பண்டிகைகளில் தங்களது படங்களை ரிலீஸ் செய்கின்றனர். ஆனால் இதுவரை தமிழ் சினிமாவில் யார் வசூலில் அதிகம் என போட்டி போடுவார்கள்.
ஒரே நேரத்தில் நான்கு, ஐந்து படங்கள் வெளிவரும். ஆனால் இந்த வருடம் எப்போதும் போல் இல்லாமல் அவரவர் தனக்கென ஒரு முக்கிய திருநாள் பண்டிகையை உச்ச நட்சத்திரங்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இது ஆரோக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது மற்றும் சுயநல போட்டியாகவும் பார்க்கப்படுகிறது.