1. Home
  2. கோலிவுட்

அஜித்துக்கு சிபாரிசு செய்த விவேக்.. லைஃப் டைம் படமாக ஏகே கொடுத்த பிளாக்பஸ்டர் 

அஜித்துக்கு சிபாரிசு செய்த விவேக்.. லைஃப் டைம் படமாக ஏகே கொடுத்த பிளாக்பஸ்டர் 
அஜித்தின் திறமைக்கு தீனி போடும் வகையில் சூப்பர் ஹிட் படத்தின் கதைக்கு சிபாரிசு செய்த விவேக்.

சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் தற்போது டாப் நடிகராக கோலிவுட்டில் கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் இந்த அளவிற்கு முன்னேறுவதற்கு பல நல்ல உள்ளங்கள் கை கொடுத்து தூக்கி விட்டுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணராகவே வாழ்ந்து மறைந்தவர் நகைச்சுவை நடிகர் விவேக்.

இவர் மூடப்பழக்க வழக்கங்களால் முடங்கி கிடக்கும் மக்களை தன் நகைச்சுவை மூலம் தெளிவுப்படுத்தியவர். இப்படி பல நல்ல கருத்துகளையும் பல நல்ல நல்ல உதவிகளையும் செய்து  வந்ததால் மக்கள் இவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்க்க ஆரம்பித்தனர். அதிலும் இவர் சினிமாவில் சாதிக்க துடிதுடித்துக் கொண்டிருந்த அஜித்துக்கு சூப்பர் ஹிட் படத்தின் கதையில் கதாநாயகனாக நடிக்க சிபாரிசு செய்துள்ளார்.

அந்த படம் தான் அஜித்தின் லைஃப் டைம் படமாக  அமைந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அஜித் இன்று காதல் இளவரசனாக வலம் வருவதற்கு முக்கியமான அஸ்திவாரம் போட்டது சின்ன கலைவாணர் விவேக். ஒரு காலத்தில் விவேக் செம பீக்கில் இருந்தார்.

அப்போதுதான் விஜய், அஜித் இருவரும் வளர்ந்து கொண்டிருக்கும் இளம் நடிகர்களாக ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தனர். அந்த படங்களில் எல்லாம் அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் ஆன கதாபாத்திரத்தில் நடித்து டாப் நகைச்சுவை நடிகராக கலக்கிக் கொண்டிருந்தவர்.

படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் விவேக் அஜித்தின் நெருங்கிய நண்பராகவே இருந்தார். அப்பொழுது விவேக்கின் நெருங்கிய நண்பரான சரண் காதல் மன்னன் கதையை வைத்து கொண்டு ஹீரோ கிடைக்காமல் சுற்றினார். இதை விவேக்கிடம் சொல்ல அவர்தான் அஜித்தை சிபாரிசு செய்துள்ளார்.

இந்தப் படம் லைஃப் டைம் ஹிட்டாக அஜித்துக்கு அமைந்தது. அதுமட்டுமின்றி விவேக்கும்  அந்த படத்தில் நடித்து கலக்கி இருப்பார். இந்த  படம்தான் அஜித்தின் சினிமா கேரியரில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த வெற்றி படங்களின் வாய்ப்புகள் வரிசையாக அஜித்துக்கு கிடைத்தது. 

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.