நடன புயல் பிரபுதேவா இந்திய சினிமாவில் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் இரண்டாவது மகனான இவர் மட்டும் இல்லை இவருடைய சகோதரர்கள் ராஜுசுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோரும் மாஸ்டர்கள் தான். இதில் பிரபுதேவா நடனம் மட்டுமில்லாமல் நடிப்புக்கும் வந்ததால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார் பிரபுதேவா. இன்றைய நிலவரப்படி பிரபுதேவாவுக்கு கோலிவுட்டை விட பாலிவுட்டில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. தமிழில் தளபதி விஜய் நடிப்பில் போக்கிரி என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கி பிரபுதேவா தான் ஒரு சிறந்த சினிமா இயக்குனர் என்பதையும் நிரூபித்தார்.
ஆரம்ப காலங்களில் துணை நடன இயக்குனராக இருந்த பிரபுதேவா படிப்படியாக முன்னேறி நடன இயக்குனர் ஆனார். அதன் பின்னர் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வெற்றியும் கண்டார் பிரபுதேவா. இவரது நடிப்பில் காதலன், விஐபி, மிஸ்டர் ரோமியோ போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
பிரபுதேவா தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் இயக்குனர் சசி என்பவர் அவரிடம் கவிதை என்னும் பெயரிடப்பட்ட ஒரு கதையை சொல்லி இருக்கிறார். பிரபுதேவாவுக்கும் கதை ரொம்ப பிடித்துப் போனது. இந்த படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர் தாணு ஓகே சொல்லி இருக்கிறார் இதில் சசி படத்தின் டிசைனை ரெடி செய்து தாணுவிடம் காட்டி இருக்கிறார் அதில் சசியின் கவிதையை தயாரிக்கும் தாணு என்று இருந்திருக்கிறது.
Also Read:ரப்பர் மனிதனைப் போல் பிரபுதேவா ஆடிய 5 பாடல்கள்.. ஆட்டத்தை பார்த்து மிரண்டு ஹீரோவாக்கிய ஷங்கர்
இந்த டிசைன் பிரபுதேவாவை ரொம்பவும் கோபப்படுத்தி இருக்கிறது. அது எப்படி அறிமுக இயக்குனராக வருபவர் தன்னை முன்னிலைப்படுத்தி தாணு போன்ற ஒரு தயாரிப்பாளரை பின்னிலைப்படுத்துவது என்று கோபப்பட்ட பிரபுதேவா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர் இந்த கதை தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியிடம் சொல்லப்பட்டு சொல்லாமலே என்னும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
இந்த படத்தில் பிரபுதேவா நடிக்க இருந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டபோது அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். பிரபுதேவா நடிக்க மறுத்து விடவே படத்தின் கதாநாயகனாக லிவிங்ஸ்டன், கதாநாயகியாக கௌசல்யாவும் நடித்திருந்தார்கள். படமும் ஓரளவுக்கு பேசப்பட்டது.
Also Read:60 படங்களில் நடித்தும் பிரோஜனம் இல்லை.. இந்த 6 படங்களை மட்டுமே ஹிட் கொடுத்த பிரபுதேவா!