1. Home
  2. கோலிவுட்

ரஜினியை உரசி பார்க்க துணிந்த சிவகார்த்திகேயன்.. நட்பை தாண்டி வரும் சங்கடம்

ரஜினியை உரசி பார்க்க துணிந்த சிவகார்த்திகேயன்.. நட்பை தாண்டி வரும் சங்கடம்
சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனே மோத நாள் குறித்து உள்ளார்.

நெல்சன் திலீப்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அதுவும் முதல் முதலாக சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி வசூலை அள்ளி தந்த டாக்டர் படத்தை நெல்சன் தான் இயக்கி இருந்தார். இதன் மூலம் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்தமான இயக்குனராக நெல்சன் இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். இப்படி நட்பாக பழகி வரும் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இடையே இப்போது மிகப்பெரிய போர் நடக்க இருக்கிறது. இவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ இவ்வாறு ஒரு சந்தர்ப்பம் நிகழ இருக்கிறது.

அதாவது நெல்சன் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், தமன்னா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இப்படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

அந்த வகையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஜெயிலர் படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் மற்றும் மாவீரன் படங்கள்
உள்ளது. அயலான் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் மாவீரனை ஆகஸ்ட் 11 வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் ரஜினியையே உரசி பார்க்க துணிந்து உள்ளார் சிவகார்த்திகேயன். அதாவது ரஜினிக்கு போட்டியாகவே சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார். ஆகையால் நெல்சன், சிவக்கார்த்திகேயன் இடையே நட்பை தாண்டி இப்போது சங்கடம் உருவாகியுள்ளது.

மேலும் இவர்களுள் யார் அதிக வசூல் செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி உள்ளது. அது மட்டும் இன்றி ரஜினிக்கு கடைசியாக வெளியான அண்ணாத்த படமும், சிவகார்த்திகேயனின் கடைசி படமான பிரின்ஸ் படமும் கலவையான விமர்சனம் பெற்றதால் அடுத்த தரமான படத்தை கொடுக்கும் முயற்சிகள் இவர்கள் இருவருமே உள்ளனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.