தற்போது கோலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட், பாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் தனுஷ் சினிமாவில் நுழையும் போது அவரை ஒரு ஆளாய் மதிக்கவே இல்லை. இருப்பினும் தன்னுடைய குடும்பத்திற்காக அவர் 21 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தியாகத்தை ரசிகர்கள் இன்றும் மறக்கவில்லை.
என்னதான் தனுஷின் தந்தையும் அண்ணனும் இயக்குனராக இருந்தாலும் நடிக்க வேண்டியது தனுஷ் தானே. அப்படி இவர் சினிமாவில் நுழையும் போது நிறைய பேர் அவரை அசிங்கப்படுத்தி இருக்கின்றனர். அப்படி இருந்தும் தனுஷ் எப்படி சினிமாவில் நுழைந்தார் என்ற சுவாரசியமான தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.
Also Read: 2023ல் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட 6 படங்கள்.. விட்டதை பிடித்த ஷாருக்கான்
இயக்குனர் விசுவிடம் 20 படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா. இவர் 18 படங்கள் தயாரித்திருக்கிறார், சுமார் 24 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். ஆனால் கஸ்தூரி ராஜா ஒரு காலத்தில் சினிமாவில் எல்லாத்தையும் இழந்துவிட்டார்.
வேறு வழியில்லை குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று சொந்த ஊருக்கு கிளம்பிய அவரை தடுத்து நிறுத்தியது மூத்த வாரிசு. ஆம் செல்வராகவன் தான் அது. அப்பா உங்களுக்கு இது தான் தெரியும். இதுலையே நாம் ஜெயிக்கலாம் என்று கடனை வாங்கி தன் தம்பி தனுசை ஹீரோவாக்கிய படம் துள்ளுவதோ இளமை. இந்த படம் வந்து இன்றோடு 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனுஷ், மேல்ப்படிப்பு படிக்க விரும்பிய அவரை சினிமாவிற்கு கொண்டு வந்து விட்டனர் இந்த குடும்பம். குடும்பத்திற்காக நடிக்க துவங்கிய தனுஷுக்கு தொடக்கத்தில் சினிமாவை பற்றி எதுவுமே தெரியாது.
Also Read: இரண்டாம் நிலை டாப் ஹீரோக்கள்.. முதல்முறையாக 100 கோடி வசூலை தாண்டிய ஐந்து படங்கள்
இருந்தாலும் அண்ணன் மற்றும் அப்பாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். எல்லாத்தையும் தியாகம் செய்து நடித்த தனுசை முதலில் இந்த திரையுலகம் ஒரு ஆளா கூட மதிக்கவில்லை. இவர் எல்லாம் ஒரு ஹீரோவா என்று கமெண்ட் செய்துள்ளனர். ஏகப்பட்ட உருவக்கேலிகளை சந்தித்தாலும் இப்போது ஹீரோவாக இவரை அனைவரும் நிமிர்ந்து பார்க்கின்றனர்.
இந்த அளவிற்கு இவர் வளர்ந்து நிற்கிறார் என்றால் முழுக்க முழுக்க அவருடைய முயற்சியும் திறமையும் தியாகமும் தான் காரணம். இவருடைய வளர்ச்சி சினிமாவில் நுழைய துடி துடித்துக் காத்திருக்கும் இளம் நடிகர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார். சமீபத்தில் கூட தனுஷ் 150 கோடிக்கு வீடு கட்டி அதில் தன்னுடைய தாய் தந்தையை குடி வைத்து அழகு பார்த்திருக்கிறார்.