ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

முதல் படம் வெற்றிக்காக நாசுக்காக வேலை செய்த பிரபுதேவா.. சொன்னது மாதிரியே செஞ்சி காட்டிட்டாரு

90 காலகட்டத்தில் தன் நடனத்தால் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் தான் பிரபுதேவா. அக்காலம் முதல் இன்று வரை இவரின் நடனத்தை கொண்டு படங்கள் வெற்றி கண்டிருக்கின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வெற்றி கண்டவர் தன் முதல் படத்தை மறைத்து பெருமைக்காக மாற்றி சொல்லி வருவது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

1994ல் பவித்ரன் இயக்கத்தில் ரோஜா, சரத்குமார், குஷ்பூ, பிரபுதேவா ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் இந்து. இப்படத்தில் இவரை லோக்கல் பாயாக காட்டப்பட்ட காரணத்திற்காக தன் முதல் படம் இது அல்ல என்று கூறி விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். மேலும் தன் நடிப்பில் வெளிவந்த முதல் படம் காதலன் என்று கூறி கொள்வதையே இவர் பெருமையாகவும் நினைத்து வருகிறார்.

Also Read: பிரபுதேவா தாடிக்கு நயன்தாரா காரணம் இல்லையாம்.. வெளிப்படையாக அவரே சொன்ன 2 காரணம்

1994ல் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் காதலன். இப்படத்தில் பிரபுதேவாவிற்கு நக்மா ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் இப்படத்தில் இவரின் நடனம் வேற லெவலுக்கு இருக்கும். இதைத் தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் வந்த காரணத்தால் இந்து படத்தை மறைக்க நினைத்திருக்கிறார்.

ஆனால் இவ்விரு படமும் ஒரே வருடம் தான் வெளிவந்துள்ளது. இந்து படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால் அப்பொழுது காதலன் படத்தை இயக்கிக் கொண்டிருந்த ஷங்கர் தன் படப்பிடிப்பினை முடித்து வெளியிட்டு விட்டார். அதைத்தொடர்ந்து சங்கர் பிரபுதேவாவிடம் இப்படத்தையே உன் முதல் படமாக சொல்லிக் கொள் எனவும் கூறி இருக்கிறார்.

Also Read: தேவி 2 – சோத்துல வை சூனியத்தை, கோவைசரளா கலக்கல் காமெடி Sneak peek வீடியோ..!

அதை மறுக்காத பிரபுதேவாவும் தன்னை பெருமையாக காட்டிக்கொள்வதற்காக இவ்வாறு கூறி வருகிறார். ஆனால் உண்மையில் இந்து படத்தில் இவரின் நடனம் இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சங்கர் இயக்கத்தில் வந்த படத்திற்கு இவர் முன்னுரிமை கொடுத்தது வியப்பை அளிக்கிறது.

இவருக்கு ஹிட் கொடுத்த இந்து படத்தை புறக்கணித்து பெரிய டைரக்டர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் படத்தை தன் முதல் படமாக வைத்துக் கொண்டார். இது இவரின் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. தற்போது வெளிவந்திருக்கும் இந்த செய்தி பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Also Read: பிரபுதேவா, உண்மையாலுமே நீங்க இயக்குனரா? அசிங்கப்படுத்திய டாப் நடிகர்

Trending News