1. Home
  2. கோலிவுட்

விஜய் சேதுபதியிடம் சரணடைந்த நயன்.. வில்லங்கமான இயக்குனருடன் போடும் கூட்டணி

விஜய் சேதுபதியிடம் சரணடைந்த நயன்.. வில்லங்கமான இயக்குனருடன் போடும் கூட்டணி
திருமணத்திற்குப் பிறகு அதிக படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நயன்தாரா, அதற்கேற்றவாறு பல நாடுகளில் தொழில் முதலீட்டையும் தொடங்கி இருந்தார்.

நடிகை நயன்தாராவுக்கு திருமணம் ஆனதிலிருந்து சினிமா வாழ்க்கை அந்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. அடுத்தடுத்து படங்கள் என பிசியாக சுற்றிக் கொண்டிருந்த இவருக்கு எந்த ஒரு புதிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் தான் நடிகர்கள் மாதவன் மற்றும் சித்தார்த் நடிக்கவிருக்கும் டெஸ்ட் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிகை மீரா ஜாஸ்மினும் நடிக்கவிருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு அதிக படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நயன்தாரா, அதற்கேற்றவாறு பல நாடுகளில் தொழில் முதலீட்டையும் தொடங்கி இருந்தார். அதேபோன்று தமிழ் சினிமாவில் எப்படியாவது தன்னுடைய காதல் கணவரான விக்னேஷ் சிவனை ஒரு பெரிய இயக்குனராக ஆக்கி விடவும் முயற்சிகள் செய்தார். ஆனால் நடிகர் அஜித்குமாரின் படத்தில் ஒப்பந்தமாகி இருந்த விக்னேஷ் சிவன் திடீரென்று அதிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் தான் இருந்து வந்தார்கள். மேலும் அவர்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸில் கனெக்ட் என்னும் திரைப்படத்தை நயன்தாரா நடித்து, தயாரித்து இருந்தார்கள். இந்த படத்திற்காக நயன்தாரா முட்டி மோதி பல பிரமோசன்களை நடத்தினார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காது மண்ணை கவ்வியது தான் மிச்சம்.

இதனால் அடுத்து நயன்தாராவின் நகர்வு என்னவாக இருக்கும் என்பது சினிமா வட்டாரத்தில் ஒரு மிகப்பெரிய கேள்வியாகவே இருந்தது. தற்போது நயன்தாராவின் அடுத்த பிளான் பற்றி அப்டேட் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு எப்போதுமே வெற்றி ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி இடம் தற்போது இவர்கள் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் படம் பண்ண திட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன.

இதில் ஒரு படம் லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்கள். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படம் மட்டுமல்லாது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ண இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் சினிமாவின் சர்ச்சை இயக்குனரான பாலா இயக்குகிறார்.

தற்போது அருண் விஜய்யை வைத்து படம் பண்ணிக் கொண்டிருக்கும் பாலா, அந்த படம் முடிந்த கையோடு, நடிகர் விஜய் சேதுபதியை, ரவுடி பிக்சர்ஸ் பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே பாலா என்றால் சர்ச்சைக்கும் , சச்சரவுக்கும் பஞ்சம் இருக்காது. இந்த நிலையில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா வேறு வழி இன்றி பாலாவுடன் இணைய இருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.