1. Home
  2. கோலிவுட்

நயன்தாராவின் காதலை மறக்காத பிரபுதேவா.? உங்களுக்கு உருட்டுறதுக்கு ஒரு அளவே இல்லையா

நயன்தாராவின் காதலை மறக்காத பிரபுதேவா.? உங்களுக்கு உருட்டுறதுக்கு ஒரு அளவே இல்லையா
அதில் நயன்தாரா இப்போது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார்.

Actress Nyanthara: லேடி சூப்பர் ஸ்டார் என்ற கெத்துடன் வலம் வரும் நயன்தாரா சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். அவரை சுற்றி எப்போதுமே ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனாலும் அதையெல்லாம் அசால்ட்டாக தட்டி விட்டுச் செல்லும் இவருக்கு பழைய பிரச்சினை ஒன்று புது அவதாரம் எடுத்து வந்திருக்கிறது.

அதாவது இவர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்றது பலருக்கும் தெரியும். ஆனால் சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக இவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து சென்று இப்போது தங்களுக்கென ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அதில் நயன்தாரா இப்போது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார்.

அதேபோல் பிரபுதேவாவும் பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் இந்த நிலையில் பிரபுதேவா தன் மகளுக்கு நயன்தாரா என பெயர் வைத்திருக்கிறார் என்று வெளிவந்துள்ள செய்தி பகீர் கிளப்பி இருக்கிறது.

சினிமாவில் தான் காதலியை மறக்க முடியாமல் காதலன் குழந்தைக்கு அவர் பெயரை வைக்கும் காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் பிரபுதேவா இப்படி செய்திருப்பாரா என்ற சந்தேகம் பலருக்கும் தோணலாம். அதை ரசிகர்கள் கூட இப்போது சோஷியல் மீடியாவில் கேள்வியாக எழுப்பி வருகின்றனர்.

மேலும் நயன்தாராவை உங்களால் மறக்க முடியவில்லையா என்றும் காதலுக்கு மரியாதை என கிண்டல் அடித்தும் வருகின்றனர். இப்படி இந்த விஷயம் வைரலாக பரவி வரும் நிலையில் இது குறித்து விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதாவது பிரபுதேவாவின் நெருங்கிய நட்பு வட்டாரம் இந்த செய்தி உண்மை கிடையாது என தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.

ஆனால் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பதை பிரபுதேவா அறிவிக்கும் வரை வெளியிடக் கூடாது என்பதிலும் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அந்த வகையில் யாரோ சில விஷமிகள் இப்படி ஒரு உருட்டை உருட்டிவிட்டு குளிர் காய்ந்துள்ளார்கள். அந்த வகையில் நயன்தாராவால் பிரபுதேவாவுக்கும், பிரபுதேவாவால் நயன்தாராவுக்கும் இப்போது புது பிரச்சனை முளைத்துள்ளது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.