செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உலகத்தை காக்க வந்த நவீன கல்கி.. மிரள வைக்கும் ப்ராஜெக்ட் கே க்ளிம்ஸ் வீடியோ

Project K: கடந்த சில வாரங்களாகவே ப்ராஜெக்ட் கே பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு இருக்கிறது. பிரபாஸ் நடிக்கும் இப்படத்தில் உலகநாயகன் இணைந்தது பெரும் ஆச்சரியமாக இருந்த நிலையில் அவர் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற செய்தியும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நள்ளிரவில் வெளியானது. கலிபோர்னியாவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்ச்சியில் வாட் இஸ் ப்ராஜெக்ட் கே என்ற தலைப்பில் வெளியான இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Also read: ரஜினி, அஜித் இணைந்து நடிக்கும் படம்.. விஜய்யை காலி செய்ய சூப்பர் ஸ்டார் போட்ட புது பிளான்

இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் உட்பட பட குழுவினர் அனைவரும் அமெரிக்கா சென்றிருந்த போட்டோக்கள் வைரலான நிலையில் இந்த வீடியோ தற்போது எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. அந்த வகையில் உலகம் இருளால் கைப்பற்றப்படும் போது ஒரு சக்தி உருவாகிறது என்ற வாசகத்தோடு வெளியான இந்த வீடியோவில் படத்தின் பெயர் கல்கி என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ராமராக நடித்திருந்த பிரபாஸ் இப்போது நவீன கல்கியாக இதில் நடிக்க இருக்கிறார். அந்த வகையில் இருளை குறிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்த மனிதர்களை பிரபாஸ் தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றுவது தான் இப்படத்தின் கதை என்பது அந்த வீடியோவை பார்த்தாலே புரிகிறது. அப்போது அந்த தீய சக்தி கமல் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also read: கமலால் உயரும் வடிவேலுவின் மார்க்கெட்.. தேவர் மகனுக்கு பிறகு இணையும் கூட்டணி

விஷ்ணு பகவானின் கடைசி அவதாரமான இந்த கல்கி கலி உலகம் முடியும் போது உலகம் சர்வநாசம் அடையும் நேரத்தில் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த கல்கி பிரம்மாண்டத்தின் உச்சமாய் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Trending News