1. Home
  2. தொலைக்காட்சி

எதிர்நீச்சல் சீரியலுக்குப் பின் கொடிகட்டி பறக்கும் குணசேகரன்.. 3 டாப் ஹீரோக்களுடன் போட்ட தரமான கூட்டணி

எதிர்நீச்சல் சீரியலுக்குப் பின் கொடிகட்டி பறக்கும் குணசேகரன்.. 3 டாப் ஹீரோக்களுடன் போட்ட தரமான கூட்டணி
டாப் நடிகர்களின் படங்களில் நடிக்கும் எதிர்நீச்சல் குணசேகரன்.

Actor Maarimuthu: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில் இத்தொடரின் வெற்றிக்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் மாரிமுத்து முக்கிய காரணம். அதாவது இயக்குனர் அந்த கதாபாத்திரத்திற்கு சரியான நபரை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் இந்த தொடருக்கு முன்பாகவே சினிமாவில் மிகவும் பிரபலமானவர்தான். பல பேரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து பிரசன்னாவின் கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஆனால் இந்த படம் சரியாக போகாத நிலையில் அடுத்த சில படங்களையும் இயக்கி இருக்கிறார்.

அதன் பிறகு சினிமாவிலேயே குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் அவரது நடிப்பு திறமைக்கு சரியான தீனி போட்ட இடம் என்றால் எதிர்நீச்சல் தான். மொத்த குடும்பத்தையுமே ஆட்டிப் படைக்கும் ஆதி குணசேகரனாக பின்னி பெடல் எடுத்து வருகிறார். இப்போது இவரது கொடி ஓங்கி பறந்து கொண்டிருக்கிறது.

ஆகையால் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களின் படங்களிலும் குணசேகரன் நடித்து வருகிறாராம். சினிமாவில் இருந்த வரைக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பு சீரியலில் நடித்த உடன் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து இருக்கிறாராம்.

அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து நடித்துள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, சூர்யா, கமல் ஆகியோர்களுடன் மாரிமுத்து நடித்து உள்ளார்.

மேலும் இந்த படங்களில் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவி வருகிறது. இது மட்டுமல்லாமல் மேலும் சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் மாரிமுத்தை நாடி வருகிறதாம். இதற்கெல்லாம் காரணம் எதிர்நீச்சல் தொடர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.