ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கமல் மெனக்கெட்டு போன் பண்ணி கூப்பிட்டும் வர மறுத்த நடிகர்.. பிக் பாஸ் உங்களுக்கு காசு எனக்கு தூசு!

Big Boss Updates: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமலே பரிந்துரைக்கப்பட்ட நடிகர்,கமல் அரசியல், சினிமா என மாறி மாறி பிஸியாக இருக்கிறார். இப்பொழுது அந்த பிசி  ஷெட்யூலிலும்  பல படங்களை தயாரிக்கவும் செய்கிறார் நடிக்கவும் செய்கிறார். இப்பொழுது பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்க இருக்கிறது. இதுவரை ஆறு சீசங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து  பிக் பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் 8ம் தேதி துவங்கப் போகிறது.

இதற்கான ப்ரொமோஷன் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகிறது. அதில் கிட்டத்தட்ட இவர்கள்தான்  கான்டஸ்டன்கள் பங்கேற்க  போகிறார்கள் என லிஸ்ட் வெளிவந்து  கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமல் பிக் பாஸ்க்கு ஒரு நடிகரை போன் போட்டுகூப்பிட்டுள்ளார். 90களில் சாக்லேட் பாயாக இருந்த அந்த நடிகர் இப்போது பட வாய்ப்பு கிடைக்காமல் விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: பிக் பாஸ் சீசன் 7ல் கமல் வாங்கும் சம்பளம்.. காற்றுள்ள போதே கல்லாவை நிரப்பும் உலக நாயகன்

கமலுக்கு தம்பி போன்ற அந்த நடிகரை கூப்பிட்டால் மறுக்க மாட்டார் என அழைத்திருக்கிறார். ஆனால் என்னை விட்டு விடுங்கள் அது உங்களுக்கு காசு எனக்கு அது வேஸ்ட்  என்று வர மறுத்திருக்கிறார். கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படத்தில் நடித்தவர் அப்பாஸ். இவர்தான் கமல் கூப்பிட்டும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.

ஏற்கனவே  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரைப் போன்ற பேமஸ் ஆக இருந்த முன்னாள் நடிகர்களான சேரன், கணேஷ் வெங்கட்ராமன், சரவணன், கஞ்சா கருப்பு, தாடி பாலாஜி போன்ற ஒரு சிலர் கலந்து கொண்டு  தங்களுக்கு இருந்த இமேஜை கெடுத்துக் கொண்டனர். அந்த நிலைமை அப்பாசுக்கு வந்துவிடுமோ என்று முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியா வேண்டவே வேண்டாம் என ஒதுங்கி விட்டார். அவர் எடுத்த முடிவு சரிதான் என்று பலரும் அப்பாசுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Also Read: அங்க இங்கனு தேடி கடைசியில கவினின் வருங்கால மனைவி புகைப்படம் வைரல்.. செம்மையான ஜோடி பொருத்தம்!

அப்பாஸ் மீண்டும் நடிப்பதற்காக இந்தியா வந்துள்ளார் குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளார், சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறார். இதற்கு காரணம் நிறைய ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள பாசத்திற்காக வந்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். அப்போது பல பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்விகளை கேட்டனர்.

இவர் தமிழ்நாட்டிற்கு வந்ததும் கமல் அவர்கள் அப்பாசுக்கு ஃபோன் செய்துள்ளார்,  பிக் பாஸ்7  நிகழ்ச்சியில் பங்கு பெற அழைத்ததாக கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன் எனக்கு சரிப்பட்டு வராது என்று சொல்லி, நடிப்பதற்கு வேண்டுமானால் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் வருகிறேன் என்று கூறிவிட்டார். முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தை விரும்புவதாக கூறியிருக்கிறார். அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது, கமல் மட்டுமே தன்னுடன் தொடர்பில் இருந்து வருகிறார். வேறு யாருமில்லை என்று கூறியிருக்கிறார்.

Also Read: குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

Trending News