1. Home
  2. தொலைக்காட்சி

ஓவர் ரவுசு விட்ட மகேஷ் பாபு, கடுப்பான இயக்குனர்.. நூலிலையில் ஸ்கோர் செய்த அல்லு அர்ஜுன்

ஓவர் ரவுசு விட்ட மகேஷ் பாபு, கடுப்பான இயக்குனர்.. நூலிலையில் ஸ்கோர் செய்த அல்லு அர்ஜுன்
மத்தவங்க செய்றதெல்லாம் நமக்கு சாதகமாவே இருக்கு என்பது போல் அல்லு அர்ஜுன் ஸ்கோர் செய்து விட்டார்.

Actor Magesh Babu: சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஒரு விஷயம் தான் இப்போது நடந்திருக்கிறது. அதாவது தெலுங்கு டாப் ஹீரோவான மகேஷ் பாபு ஓவர் ரவுசு விட்டு தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட சம்பவம் பகீர் கிளப்பி இருக்கிறது.

என்னவென்றால் சமீபத்தில் 69-ஆவது தேசிய விருது பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில் புஷ்பா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருந்தது. இதற்கு தெலுங்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மகேஷ்பாபு மட்டும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம். இதற்கு முக்கிய காரணம் புஷ்பா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான். அதாவது புஷ்பா பட கதையை முதலில் இயக்குனர் சுகுமார் அவரிடம் தான் சொல்லியிருக்கிறார்.

அப்போது மகேஷ் பாபு கதையில் ஏகப்பட்ட குறைகளை சொல்லி இயக்குனரை கடுப்பேத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதை மாற்றுங்கள், அதை மாற்றுங்கள் என இயக்குனருக்கே ஐடியா கொடுத்திருக்கிறார். ஆனால் சுகுமார் முடியாது என்று பிடிவாதம் பிடித்தாராம்.

அதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாகி இருக்கிறது. அதன் பின்னர் தான் அல்லு அர்ஜுன் அந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இவ்வாறாக நூலிலையில் இடம் மாறிய வாய்ப்பால் இப்போது நொந்து போனது மகேஷ் பாபு தான்.

அவர் மட்டும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருந்தால் நிச்சயம் இந்த வாய்ப்பு கை விட்டு போயிருக்காது. ஆனால் மத்தவங்க செய்றதெல்லாம் நமக்கு சாதகமாவே இருக்கு என்பது போல் அல்லு அர்ஜுன் ஸ்கோர் செய்து இப்போது தேசிய விருதையும் தட்டிச் சென்றுவிட்டார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.