நீதிபதி போட்ட போடில் அரண்டு போன விஷால்.. மொத்தமாக ஆட்டம் காண வைத்த லைக்கா

Actor Vishal: விஷால் என்றாலே பிரச்சினை தான் என்று சொல்லும் அளவுக்கு சமீப காலமாக ஏகப்பட்ட சர்ச்சைகளில் அவர் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதில் லைக்காவுடன் அவருக்கு இருக்கும் நீண்ட நாள் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதாவது விஷால் தங்கள் நிறுவனத்திற்கு தர வேண்டிய 15 கோடி ரூபாய் பணத்தை தராமல் இழுத்தடித்து வருவதாக லைக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே இது விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற புது பிரச்சனையும் கிளம்பியது.

ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் இப்படி ஒரு பிரச்சனை வந்ததையடுத்து விஷால் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அங்கு அவர் நான் இவ்வளவு பணம் வாங்கவில்லை என்று முறையிட்டார். அனைத்தையும் தீர விசாரித்த நீதிபதி நீங்கள் படித்தவர் தானே, இது உங்கள் கையெழுத்து தானே, அப்புறம் ஏன் மாற்றி பேசுகிறீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதனால் விஷால் சர்வமும் ஒடுங்கி போய் பம்மிய படி இருந்திருக்கிறார். மேலும் அவருடைய கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வங்கி வரவு செலவு கணக்குகளையும் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இப்படியே அவர் போட்ட போடில் விஷால் கொஞ்சம் அரண்டு தான் போயிருக்கிறாராம்.

பல மாதங்களாகவே லைக்கா உடன் இப்படி ஒரு பிரச்சனையை தான் அவர் சந்தித்து வருகிறார். பணத்திற்கு பதில் கால்ஷீட் தருகிறேன் என்று கூறிவிட்டு அதையும் தராமல் போக்கு காட்டி வந்ததால் தான் தயாரிப்பு தரப்பு இப்படி ஒரு நெருக்கடியை அவருக்கு கொடுத்திருக்கிறது.

இதனால் மார்க் ஆண்டனி பட தயாரிப்பாளர் தான் நொந்து போயிருக்கிறார். ரிலீஸ் நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டது பதட்டத்தை கொடுத்தாலும் தற்போது அதற்கான தடை நீங்கி இருப்பது அவர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. இவ்வாறாக லைக்கா காட்டிய ஆட்டத்தால் ஆடிப்போன விஷால் அடுத்த கட்ட ஆலோசனையில் இறங்கி இருக்கிறாராம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய் - கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமா செய்திகளை ரசிகர்களுக்கு கொண்டு சென்று வருகிறார். Google News approved publisher, 1.3 மில்லியன் YouTube subscribers, 1.3 மில்லியன் Facebook subscribers,1.4 லட்சம் Instagram followers உடன் தமிழ் சினிமா உலகில் நம்பகமான தகவல் ஆதாரமாக விளங்கி வருகிறார்.

View all posts →