5 Celebrities Got Fame from Kamal Movies: சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கனவுடன் எத்தனையோ பேர் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். அதில் ஒரு சிலரால் மட்டுமே அவர்களுடைய கனவை நினைவாக்க முடிந்திருக்கிறது. இதனால் மற்றவர்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அப்படியே அவர்களுடைய வாழ்க்கையை ஓட்டிட்டு போய்விடுவார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் நல்ல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்கு ஓரளவுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும். அந்த வகையில் ரஜினி மற்றும் கமல் படங்களில் நடித்த நடிகர்கள் மக்களிடம் பரிச்சயமாக இருக்கிறார்கள். அதிலும் பணம் சம்பாதித்து லாபத்தை பெற வேண்டும் என்றால் ரஜினி படத்தில் தான் நடிக்க வேண்டும்.
ஏனென்றால் ரஜினி படத்தில் நடித்தால் தேவையான பணம் கிடைக்கும். அதே மாதிரி பேரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்றால் கமல் படத்தில் நடித்தால் மட்டுமே அது கிடைக்கும். அந்த வகையில் கமல் படத்தில் நடித்த பலரும் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகி அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இந்த விஷயத்தை சமீபத்தில் டெல்லி கணேசன் ஒரு இன்டர்வியூவில் கூறி இருக்கிறார். அப்படி கமல் படங்களில் நடித்து அங்கீகாரம் கிடைத்த நடிகர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். அதில் நானும் நாசர், ராதாகிருஷ்ணன், ஊர்வசி மற்றும் எஸ் என் லட்சுமி என்று கூறியிருக்கிறார்.
அதற்கு காரணம் கமல் படத்தில் கொடுக்கப்படும் கதாபாத்திரம் எங்களுக்கு ரொம்பவே முக்கியமான அழுத்தமான கேரக்டராக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். அப்படி அவர் படங்களை நடித்து தான் நாசர் அதிக அளவில் மக்களுக்கு பிரபலமானார்.
அத்துடன் அவர் படங்களில் நடிக்கும் போது நம்முடைய நடிப்பு அவருக்கு பிடித்து விட்டால் தொடர்ந்து அவருடைய படங்களில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்து விடுவார். இதனால எங்களை மாதிரி நடிக்கும் ஆர்டிஸ்ட்கள் கமல் படத்தில் நடிப்பதற்கு தவமாய் காத்துக் கொண்டிருப்போம் என்று கமலை பற்றி புகழாரம் சூடி இருக்கிறார் நடிகர் டெல்லி கணேசன்.