செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

5 வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. அடேங்கப்பா! இதுக்கா இவ்வளவு அவமானம்

BB7 Wild Card Entries Salary: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மூன்று பேர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். 13 போட்டியாளர்களுடன் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் நுழைந்து இருக்கிறார்கள். எந்த சீசனிலும் இல்லாத வகையில் பழைய போட்டியாளர்களுக்கும் இந்த வைல்டு கார்டு என்ட்ரிகளுக்கும் இடையே பயங்கர பிரச்சனை நிலவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய போட்டியாளர்கள், புதிதாக உள்ளே வந்திருக்கும் இந்த ஐந்து போட்டியாளர்களை வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். புதிதாக வந்தவர்களை மொத்தமாக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பியது, அவர்களை மட்டுமே நாமினேட் செய்தது, அவர்களை கடுப்பேத்துவதற்காக விசித்ராவை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பியது என பழைய போட்டியாளர்கள் எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு கஷ்டப்பட்டு புதிதாக வந்த போட்டியாளர்கள் எதற்காக உள்ளே இருக்க வேண்டும் என்று கேட்டால், எல்லாமே பிக் பாஸ் கொடுக்கும் சம்பளத்திற்காகத்தான். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைந்திருக்கும் போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா என ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது அந்த லிஸ்ட்.

Also Read:பிரதீப்பை ஆட்டம் காண வைக்கும் 2 வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. சூடு பிடிக்கும் பிக் பாஸ் ஆட்டம்

துபாயில் உள்ள ரேடியோ சேனலில் வேலை பார்த்து வந்த பிராவோவுக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அர்ச்சனா ஏற்கனவே விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். இவர் மாடலும் கூட. இவருக்கு ஒரு நாளைக்கு 18 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியின் கல வர்ணனையாளர் அன்ன பாரதிக்கு ஒரு நாளைக்கு 20,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது. சின்னத்திரை நடிகர் தினேஷ் கோபாலசாமி ஏற்கனவே விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் நடித்தவர். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தினேஷுக்கு ஒரு நாள் சம்பளமாக 20000 கொடுக்கப்படுகிறது.

கானா பாடல்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் பாலா. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தது எல்லோருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. வந்த ஒரு வாரத்திலேயே ஆடியன்ஸ்களிடம் நல்ல பெயர் வாங்கி இருக்கும் கானா பாலாவுக்கு ஒரு நாளைக்கு 25000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

Also Read:நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 9 பேரில் இந்த வாரம் வெளியேறும் சூனியக் கிழவி.. வைரலாகும் ஓட்டிங் லிஸ்ட்

Trending News