1. Home
  2. கோலிவுட்

ரஜினி, கமல் படத்தால் நாசமாக்கப்பட்ட தியேட்டர்கள்.. பின் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய சம்பவம்

ரஜினி, கமல் படத்தால் நாசமாக்கப்பட்ட தியேட்டர்கள்.. பின் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய சம்பவம்
கமல் மற்றும் ரஜினியின் படங்கள் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட அதன் பிறகு கொண்டாடப்பட்டது.

Rajini - Kamal : எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்குப் பிறகு ரஜினி, கமல் அந்த இடத்தை பிடித்திருந்தனர். அதன் பிறகு அஜித், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன், தனுஷ் என்று அடுத்தடுத்து தலைமுறைகள் வந்து விட்டாலும் தற்போது வரை சினிமாவில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ரஜினி இப்போது அடுத்தடுத்து ஐந்து படங்களை லாக் செய்து வைத்திருக்கிறார்.

மேலும் ரஜினிக்கு போட்டியாக கமலும் படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒருபுறம் தயாரிப்பிலும் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் தியேட்டரில் வெளியான போது கமல் மற்றும் ரஜினி படத்திற்கு எதிர்ப்பு வெளியான நிலையில் அதன் பிறகு அந்த படங்கள் கொண்டாடப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் கமலின் திரை வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இப்போது வரை கொண்டாடப்படும் படங்களில் முக்கிய இடத்தில் இருப்பது நாயகன். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இந்த படம் ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கிறது. மேலும் ரசிகர்கள் கடும் கோபத்திற்கும் உள்ளாகி இருக்கின்றனர்.

அதன்பிறகு தான் படத்தின் கதை புரிந்த பின்பு ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் ரஜினி மற்றும் மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி படமும் வசூலில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. ஆனால் அதன் பிறகு கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் ஜே சூர்யா ஒரு பேட்டியில் சொல்லும் போதும் நாயகன் மற்றும் தளபதி இரண்டு படங்களும் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டாலும் அதன் பிறகு கமல் மற்றும் ரஜினியின் வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்தது என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் கமலின் அன்பே சிவம், ஹேராம் போன்ற பல படங்கள் இந்த வரிசையில் இருக்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.