1. Home
  2. கோலிவுட்

பாகுபலி நாயகனை காப்பாற்றியதா சலார்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

பாகுபலி நாயகனை காப்பாற்றியதா சலார்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Salaar Twitter Review: கடந்த சில தோல்விகளால் துவண்டு போயிருந்த பிரபாஸ் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் சலார் மூலம் கைகோர்த்து இருக்கிறார். பிரித்விராஜ், ஜெகபதிபாபு, ஸ்ருதிஹாசன், பாபி சிம்ஹா என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் இன்று பெரும் ஆரவாரத்துடன் வெளியாகி இருக்கிறது.

பாகுபலி நாயகனை காப்பாற்றியதா சலார்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
salaar-review

இதற்காகவே காத்திருந்த பாகுபலி நாயகனின் ரசிகர்கள் தற்போது இன்றைய நாளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். அதன்படி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் சில நெகட்டிவ் கருத்துகளும் வந்து கொண்டிருக்கிறது.

பாகுபலி நாயகனை காப்பாற்றியதா சலார்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
review-salaar

அந்த வகையில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜின் நடிப்பு வெகு பிரமாதமாக இருக்கிறது. ஆனால் பிஜிஎம் பொருத்தவரையில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அதேபோன்று முதல் பாதி டீசென்ட் ஆகவும் இரண்டாம் பாதி மிகவும் சாதாரணமாக இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல இடங்களில் பிரபாஸ் ஸ்லோ மோஷனில் நடந்து கொண்டே இருக்கிறார். அதேபோன்று கிளைமாக்ஸ் காட்சியிலும் பெரிய திருப்பம் இல்லை. எமோஷனல் கனெக்ட் சுத்தமாக இல்லை என ஒரு ரசிகர் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

பாகுபலி நாயகனை காப்பாற்றியதா சலார்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
salaar-twitter

இப்படியாக சில பின்னடைவான கருத்துக்கள் வந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் இப்படத்தை ஆரவாரமாக தான் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு பிரபாஸின் விஷுவல் ட்ரீட் திருப்தியாக அமைந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான விமர்சனங்கள் கேஜிஎப் இயக்குனரிடம் இருந்து இன்னும் எதிர்பார்த்தோம் என்று தான் வந்து கொண்டிருக்கிறது.

பாகுபலி நாயகனை காப்பாற்றியதா சலார்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
twitter-review-salaar

ஆக மொத்தம் இந்த ஆண்டின் கிளைமாக்ஸ் போல் வந்திருக்கும் சலார் பிரபாஸுக்கு வெற்றியா, தோல்வியா என்பது வசூலை பொறுத்து தெரிந்துவிடும். அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வர இருப்பதும் படக்குழுவுக்கு சாதகமாக இருக்கிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.