Insulted to Vijay : விஜய் முன்னணி நடிகர் என்பதையும் தாண்டி தற்போது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக அரசியலில் கால் தடம் பதிக்க ஆரம்பித்து விட்டார். அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்பவே பொறுப்பாகவும், கடமையாகவும் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களை கவரும் வகையில் விஜய்யின் நடவடிக்கைகள் இருக்கிறது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு விஜய் போயிருந்தார். அப்பொழுது அந்தக் கூட்ட நெரிசலில் விஜய்க்கு எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது. அதாவது யாரோ ஒரு மர்ம நபர் விஜய் மீது காலணியை தூக்கி எறிந்ததாக ஒரு வீடியோ வைரலானது.
ஆனாலும் விஜய் இந்த அசிங்கத்தை கொஞ்சம் கூட பெரிது படுத்தாமல் காதும் காதுமாய் வச்சு மறைத்து விட்டார். ஏனென்றால் சில கெட்ட விஷயங்களை அந்த நிமிடத்திலேயே மறந்து விட வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோலவே விஜய்யும் இதை கமுக்கமாகவே விட்டுவிடலாம் என்று நினைத்திருக்கிறார்.
Also read: கேப்டன் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகிகள்.. இறந்த பிறகு நீலி கண்ணீர் வடித்த விஜய்
ஆனாலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்க விஷயம் என்று ஒவ்வொருவரும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள். தற்போது ஓரளவுக்கு இந்த விஷயத்தை மறைந்த நிலையில் இதை மீண்டும் அப்பட்டமாக வெளிப்படுத்தி விஜய்க்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கும் அளவிற்கு ரசிகர் ஒருவர் அம்பலப்படுத்தி விட்டார்.
அதாவது இப்படி ஒரு விஷயத்தை மேற்கோள் காட்டி அந்த மர்ம நபர் செய்த கேவலமான வேலைக்கு கண்டிப்பாக அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார். அத்துடன் அவர் அளித்த புகார் கடிதத்தில் விஜயகாந்த்-க்கு இறுதி அஞ்சலி செலுத்தும் போது விஜய்க்கு என்ன ஒரு அவமானம் ஏற்பட்டதோ அதை தெளிவாக இருக்கிறது.
இந்த ஒரு விஷயம் மறுபடியும் விஜய்யை அசிங்கப்படுத்தும் அளவிற்கு அனைவருக்கும் ஞாபகப்படுத்தும் விதமாக இருக்கிறது. எது எப்படியோ உண்மையிலேயே அந்த மர்ம நபர் செய்தது மிகப்பெரிய குற்றம். அதற்கு ஏற்ற தண்டனை அவருக்கு கண்டிப்பாக வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள்.
விஜய்க்கு ஏற்பட்ட அவமானத்திற்கு ரசிகர் கொடுத்த புகார்
Also read: கலைஞரின் நூறாவது விழாவிற்கு விஜய் வருவது உறுதியானது.. அரசியலில் நுழைவதால் ரொம்பவே பொறுப்பு வந்துட்டு