திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

உள்ளதும் போச்சே என நொந்து போன அஞ்சு ஹீரோயின்கள்.. வில்லியாக புண்ணாகி போன புன்னகை அரசி

Top 5 tamil actresses who suffered decline due to negative characters: சினிமாவில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நடிகைகளால் ஜொலிக்க முடிகிறது. அவ்வாறு இருக்கும் போது நடிகைகள் சிலர் புகழின் உச்சியில் இருக்கும் போது நெகட்டிவான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து  தனது வெற்றி பாதையை துண்டித்துக் கொள்கின்றனர். அவ்வாறு சில நடிகைகள் தேர்ந்தெடுத்த நெகட்டிவ் கேரக்டரை பார்க்கலாம்.

சிம்ரன்: தமிழில் விஜய் அஜித் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் என பிசியாக இருந்த 90களின் கனவு கன்னி சிம்ரன் தனது தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கிரங்கடித்து விடுவார். இவர் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் நண்பனுக்கு யோசனை சொல்லி காதலிக்க வைத்துவிட்டு அதை அவரே கெடுத்து ரசிகர்கள் மனதை சுக்குநூறாக்கினார்.

ஜோதிகா: ரசிகர்கள் ஜோதிகாவை சந்திரமுகி பேயாக கொண்டாடினாலும் கொண்டாடுவார்கள் வில்லியாக ஏற்க மாட்டார்கள் என்பதை நிரூபித்த படம் பச்சைக்கிளி முத்துச்சரம். இந்த படத்தில் குழந்தைத்தனமான முகத்தில் கோபத்தை ஏற்றி கொடூரமாக மாறி இருந்தார் ஜோதிகா. இதற்கு பின் இந்த மாதிரி நெகட்டிவ் கேரக்டர்களை இவர் தேர்ந்தெடுக்கவே இல்லை.

Also read:  சூதாட்டத்தில் இறங்கிய சூர்யா.. ஜோதிகா மீது கடுப்பில் இருக்கும் சிவக்குமார்

சினேகா: சூர்யாவின் பேரழகன் படத்தில் “சினேகா” என்ற ஒரு பெயரில் தான் ஏமாந்து விட்டேன் என்று விவேக் கூறுவார். அந்த அளவுக்கு அளவான கவர்ச்சியில் அடக்கமான பெண்ணாக தமிழ் நெஞ்சங்களை கவர்ந்திருந்த  புன்னகை அரசி சினேகா, புதுப்பேட்டை படத்தில் சர்ச்சைக்குரிய கேரக்டரில் தோன்றி தமிழ் ரசிகர்களை புண்ணாக்கி இருந்தார் இதற்குப் பின் இவருக்கு காதல் படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்தது எனலாம்.

ரீமா சென்: ஆக்ரோஷமான லவ்வராக வல்லவனில் சிம்புவை புரட்டி எடுத்த ரீமாசென், படத்தில் நடிக்கவில்லை கீதா வாக வாழ்ந்தார் என்னும் சொல்லும் அளவுக்கு படத்தை தூக்கி நிறுத்தி இருந்தார். அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவனிலும் நெகட்டி ரோலே அமைந்தது. தொடர்ந்து இதே நிலை நீடித்ததால் பின்வாங்கிய ரீமா சென் கல்யாணம் குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.

சதா: ஜெயம் படத்தில் கல்லூரி பெண்ணாக காதல் கதையில் இளைஞர்களை வசப்படுத்திய சதா, தொடர்ந்து விக்ரம் உடன் அந்நியன், உன்னாலே உன்னாலே போன்ற வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பது போல் டார்ச் லைட் படத்தில் சர்ச்சையான கேரக்டரில் வந்து மார்க்கெட் இழந்து மண்ணாகிப் போனார் சதா.

Also read: 23 வருட சினிமா வாழ்க்கையில் சினேகா சேர்த்து வைத்த சொத்து.. பிசினஸிலும் கல்லாக்கட்டும் சிரிப்பழகி

- Advertisement -spot_img

Trending News