SAC took lessons from Lokesh with Vijay: தளபதி விஜய், இப்போது கோலிவுட் உச்ச நட்சத்திரமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவருடைய தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் தான். ‘பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு’ என்பதை நிரூபிக்கும் நிகழ்வாக எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் லோகேஷ், நெல்சன் போன்ற இயக்குனர்களுக்கு எல்லாம் பாடம் புகட்டும் வகையில் பேசி இருக்கிறார்.
இப்போது இருக்கும் டாப் இளம் இயக்குனர்கள் எல்லாம் விஜய்யை வைத்து படம் எடுத்து அசால்டாக 100 கோடி வசூலை காட்டி விடுகின்றனர். ஆனால் விஜய் இந்த அளவிற்கு வளர்வதற்கு எஸ்ஏ சந்திரசேகர் நிறையவே கஷ்டப்பட்டு இருக்கிறார். விஜய்யை வைத்து அவருடைய சொந்த தயாரிப்பில் படத்தை எடுத்து பல தோல்விகளை சந்தித்த பின்பு தான் தளபதி என்ற அந்தஸ்து விஜய்க்கு கிடைத்தது.
ஆனால் இப்போது அதை எல்லாம் சுக்கு நூறாக உடைப்பது போல், எஸ்ஏ சந்திரசேகர் நினைக்கிறார். விஜய்யின் சமீப கால படங்கள் எதுவுமே அவருக்கு பிடிக்கவில்லை. ஆக்ஷன் படங்கள் என்று சொல்லி நிறைய சண்டை காட்சிகளை வைத்து விஜய்யை அவமானப்படுத்துவதை எஸ்ஏ சந்திரசேகரால் பார்த்துக் கொள்ள முடியவில்லை.
Also Read: அந்தப் படம் யார் நடிச்சாலும் சில்வர் ஜூபிலி தான்.. மேடையில் தளபதியை அவமானப்படுத்திய எஸ் ஏ சி
இளம் இயக்குனர்களிடம் வேண்டி கேட்டுக்கொண்ட SAC
அதிலும் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் விஜய் தான் போதைப்பொருள், கஞ்சா, ஃபேக்டரியின் தலைவராகவே காட்டி அசிங்கப்படுத்தினர். ஆனால் அதை தான் இப்போது ஹீரோயிசம் என்றும் ரசிகர்களை நம்ப வைக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத எஸ்ஏ சந்திரசேகர், ‘அந்தக் காலத்தில் 10 பேரை வெட்டுபவரை வில்லன் என்றார்கள்.
இப்போது ஒரு படத்தில் 10 பேரை கொன்று குவிப்பவரை ஹீரோ என்கிறார்கள். இது என்ன கால கூத்து. தயவுசெய்து இயக்குனர்களே உங்கள் காலை தொட்டு கேட்டுக்கொள்கிறேன், நல்ல படங்களை இளைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுங்கள்’ என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். இவருடைய இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.
Also Read: லோகேஷ்-க்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய்யின் 3 காட்சிகள்.. அல்டிமேட் ஆக மிரட்டிய துப்பாக்கி