திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

அஜித்தை தப்பா பயன்படுத்திய மீடியாக்கள்.. ஒட்டும் உறவும் வேண்டாம்னு AK இருப்பதன் பின்னணி

Media misused Ajith so that he doesnot maintain good relationship: “நீ ஏறினாலும் வாருனாலும் கெத்தவிடாத, எவன் சீறினாலும் மாறுனாலும் கெத்தவிடாத” என்ற கவிஞனின் வரிகள், வரிகள் அல்ல! திரை வாழ்வில்  கெத்து காட்டும் அஜித்தின் கொள்கைகள் தான் அவை. இன்று அஜித்தை புறக்கணிப்போம் என்று வலைதள விஷமிகள் பல பேர் அஜித்தின் ரசிகர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

இதில் அவர்களுக்கு பல ஆதாயங்கள். உண்மையான ரசிகன் என்பவன் தன் தலைவனை மட்டுமே துதி பாடுவான் ஆனால் இங்கு உளரீதியாக ஒருவரை தகாத வார்த்தைகளால் வசைபாடி தன் தலைவன் தான் கெத்து என்று காட்ட முற்படுகின்றனர் இது வெற்றி அல்ல வெத்துவேட்டு. 

தலைவன், ரசிகர் மீது இருக்கும் அக்கறையினால் தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் எனவும், பிடித்திருந்தால் மட்டுமே படம் பார்க்கவும் எனவும் கூறுவது எந்த விதத்தில் அநியாயம்? அதுமட்டுமின்றி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் எங்கே வரணும், எங்கே போகணும் என்று எதிர்பார்க்க ரசிகர்கள் ஏன் மெனக்கிட வேண்டும். ஆரம்பத்தில்  மீடியாக்கள் மூலமாக மக்களுடன் நெருக்கமாக இருந்த அஜித் விலக காரணம் தான் என்ன?

Also read : ரெய்டுக்கு பயந்து பணம் கஷ்டம் என புலம்பும் லைக்கா.. பெத்த லாபத்தில்  சுபாஸ்கரனின் தரமான சம்பவங்கள்

உண்மையிலேயே அஜித்  பேச ஆரம்பித்தால், இடம் பொருள் ஏவல் தெரியாமல் பேசிக்கொண்டே இருப்பாராம். ஆரம்பத்தில் ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் போதும் மீடியாக்களை பர்சனலா கூப்பிட்டு ட்ரீட் கொடுப்பார். அவர் கைகளால் பரிமாறுவார். விஜய்யை பற்றி நிறைய பேசுவார். அவர் கொடுக்கும் பார்ட்டியில் அவர் மேலேயே வாமிட் எடுத்து ரணகளப்படுத்தி அஜித்தை வெறுப்பேற்றியுள்ளனர் மீடியாக்கள்.

பத்திரிக்கையாளர்களின் போலி துதி, முதுகில் குத்துவது, இவர் பேசியதை கண்டெண்ட்டாக எடுத்து இவருக்கே ரிவீட் அடிப்பது போன்ற பல செயல்களால் மீடியா மேல் இருக்கும் வெறுப்பில் ஒரு கட்டத்தில் அவரே விலக ஆரம்பித்தார் இதுபோக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்தின் மீதி இருக்கும் அக்கறையில் தனியாக கூப்பிட்டு அவருக்கு நிறைய அட்வைஸ் பண்ணினார். 

கடந்த சட்டசபை தேர்தலில் கூட குடிமகனாக தனது கடமை நிறைவேற்ற வந்த அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியை ரசிகர்கள் ரணகளப்படுத்தினர் ஏன் இந்த ஆர்ப்பாட்டம். ரசிகனுக்கு உள்ள எல்லையை மீறும் போது தலைவனுக்குரிய கண்ணியத்தை மீற நேர்வது அநியாயமா? ஆனால் மீடியாக்கள் தற்போது வரை இவரது செய்யும், செய்யாத என அனைத்தையும் பெரிதுபடுத்தி இவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருகிறது. எவன் சீறினாலும் மாறுனாலும் கெத்தவிடாத அஜித், ரீலில் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோ தான்.

Also read: அஜித்தை பற்றி தப்பா டமாரம் அடிக்கும் கூட்டம்.. ஒதுங்கிக் கொள்ளச் சொல்லும் தயாரிப்பாளர்

- Advertisement -spot_img

Trending News