ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தானாக தேடி வந்த அரசியல் பதவி.. ஆனாலும் கார்த்திக் காணாமல் போக காரணம் என்ன?

நவரச நாயகன் கார்த்திக் படங்களுக்கு 90களில் அவ்வளவு மவுசு. கார்த்திக் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் பற்றிப் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.பார்ப்போம். பொன்னுமணி செம மாஸ் ஹிட். அந்த அளவிற்கு பெண்களுக்கும் ஏன் இளைஞர்களுக்கும் பிடித்த நாயகனாக இருந்து வந்த சமயம் அது.

கார்த்திக் ஒவ்வொரு தடவையும் எலெக்ஷனை ஒட்டி பிரஸ் மீட் வைப்பார். அந்த சமயம் திருநெல்வேலியில் இருந்து ஒரு குடும்பம் அவரைப் பார்க்க அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தது. அவரது மேனேஜர் அதைக் கண்டதும் என்ன விஷயம் என்று கேட்டார். எதுவும் உதவி வேணுமான்னு கேட்டார். அதற்கு அவர், ஐயா உதவி எல்லாம் கேட்டு வரல.

அப்போது என் பையன் கார்த்திக்கோட மிகத் தீவிரமான ரசிகர். 43 வயசாகுது, கல்யாணமே பண்ணிக்கல. இவரு வந்து தாலியை எடுத்துக் கொடுத்தால் தான் கல்யாணமே பண்ணிக்குவேன்னு சொல்றாருன்னு சொல்லிட்டு ஓ-ன்னு அழ ஆரம்பிக்குறாங்க. என்ன செய்வதென்று தெரியாமல் மேனேஜர்.

இப்படி ஒரு ரசிகர்களா என வேறு வழியில்லாமல் கார்த்திக்கிடம் விவரத்தை சொல்லி சூட்டிங் முடிந்ததும் ஒரு ஓட்டலில் தங்க வைத்து அந்தப் பெற்றோரையும் அழைத்துப் பேச வைத்தார். அவர்கள் அழுது கொண்டே விவரத்தை சொன்னார்கள்.

கார்த்திக் இது மாதிரி ஒரு சூழ்நிலையை சந்தித்தது இல்லை. அவர்களுக்காக நான் கல்யாணத்துக்குக் கண்டிப்பா வர்றேன்னு கார்த்திக் சொல்லிட்டாரு. அப்போ தூத்துக்குடிக்கு பிளைட் கிடையாது. மதுரையில இருந்து எட்டயபுரம் வழியாக காரில் வருகிறார். மண்டபத்தை அடைய முடியவில்லை. அவ்வளவு கூட்டம்.

கார் முன்னால வரவழைத்து காரின் மேல் ஏறி நின்று கார்த்திக் மணமகனுக்கு தாலியை எடுத்துக் கொடுத்துக் கட்டச் செய்தாராம். மணமக்களுக்கான கிப்டைக் கூட காரில் இருந்து எடுக்கமுடியவில்லை. அவ்வளவு கூட்டம். திரும்ப கார்த்திக்கின் கார் மதுரை ஏர்போர்ட் வரும் வரையிலும் 150 பைக்கில் ரசிகர்கள் பின்தொடர்ந்தார்களாம்.

சினிமாவிலும், அரசியலிலும் மட்டும் கார்த்திக் அக்கறை செலுத்தி இருந்தால் இப்போ அவர் வேற மாதிரி தற்போதும் இருந்திருப்பார். ஆனால் இப்போ உள்ள இளைஞர்களுக்கு வெறும் நடிகராக மட்டுமே தெரிந்து வருகிறார்.

அவரது பெருமையும் அருமையும் அப்போ உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். ஏன் அவர் நினைத்திருந்தால் முதலமைச்சராக கூட ஆகி இருக்கலாம். அந்த அளவுக்கு புகழ்வாய்ந்தவராக இருந்தார்.

அவர் உச்சத்தில் இருந்தபொழுது அவருக்கு தேவர் சமுதாய கட்சியிலும், மற்ற கட்சிகளிடமும் நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் சினிமா, அரசியல் இரண்டையும் பாதியில் விட்டுட்டு வேற ரூட்டில் சென்றுவிட்டார்.

Trending News