தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த படம் யாரால் ஓடிக்கொண்டிருக்கிறது? ஏன் இப்படி காட்டுத்தனமா ஓடுதுனு பெரிய விவாதமே நடந்து வருகிறது. இதனை திருச்சி ஸ்ரீதர் ஒரு பேட்டியில் விளக்கத்தை கொடுத்து முற்று புள்ளி வைத்து விட்டார்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை குணா குகையில் எடுத்தாலும், குணா படத்திற்கும் இந்த படத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என கூறுகிறார். அதாவது இந்த படம் நண்பர்களுக்காக நண்பர்களின் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்டது. அதனால்தான் இளைஞர்கள் கூட்டத்தால் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என கூறினார்.
இந்த படத்தின் வெற்றிக்கு குணா படத்தின் இரண்டு வரி பாடல்கள் மற்றும் குணா படத்தின் குகை இரண்டும் ஒரு சிறிய காரணம் மட்டுமே எனவும் கூறினார். இந்த படத்தை குணா குகையில் கூட எடுக்கவில்லை குணா குகை போல ஒரு செட்டு போட்டு தான் எடுத்தார்கள்.
குணா மஞ்சும்மல் பாய்ஸ் ஒரு சம்மந்தமும் இல்லை
குணா படத்தில் உள்ள காட்சிகளுக்கும் இந்த படத்தின் கதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என கூறினார். அதிலும் கமலின் பங்கு ஒண்ணுமே இல்லை, இளையராஜாவாது ஒரு பாட்டு போட்டார் அதனை படக்குழு பயன்படுத்தினார்கள்.
ஆனால் கமலின் பங்கு என்ன? மேலும் குணா குகை இல்லாமல் வேறு எந்த குகையில் இந்த படத்தை எடுத்திருந்தாலும் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும்.
ஏனென்றால் இந்த கதையே ஒரு குகையில் விழுந்த நண்பனை காப்பாற்ற போராடும் மற்ற நண்பர்கள். அது குணா குகையா இருந்தாலும் சரி, தளபதி குகையா இருந்தாலும் சரி. எனவே இது நண்பர்களுக்கான படமே தவிர வேற ஒன்றும் இல்லை என்று கூறினார்.
குணா படத்தின் மிகப்பெரிய தோல்வி இதை யோசிக்க வைக்கிறது. ஓடாத குணா படத்தை பார்த்து இன்னொரு படம் ஓடுதுனு சொல்றதுலாம் ரொம்ப ஓவர் தான். குணா படத்தால் அடைந்த நஷ்டம் அந்த படத்தை தயாரித்த அலமேலு சுப்ரமணியம்க்கு தான் தெரியும்.
யார் என்ன சொன்னாலும் மஞ்சும்மல் பாய்ஸ் மலையாள சினிமாவில் 250 கோடி வசூலில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யாரால் வெற்றி பெற்றால் என்ன தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர் என அனைவரும் நல்லா லாபம் பார்த்து இருக்கிறார்கள்.