சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அண்ணாமலையை சீண்டிப் பார்க்கும் சுருதியின் அப்பா.. ஆவேசத்தில் கொந்தளிக்க போகும் முத்து, உச்சகட்ட சந்தோஷத்தில் ரோகினி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சுருதிக்கும் ரோகிணிக்கும் நடக்கப் போகும் தாலி பெருக்கு பங்க்ஷனில் முத்துவால் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்று விஜயா நினைக்கிறார். அதனால் மீனாவிடம் போய் முத்துவை கொஞ்சம் வாய் அடக்கி பேச சொல்லு என்று சொல்கிறார்.

அதற்கு மீனா, தேவையில்லாமல் என் வீட்டுக்காரர் எங்கேயும் பேசமாட்டார். எந்த ஒரு விஷயத்தில் தவறு இருக்கிறதோ, அதற்கு கண்டிப்பாக நியாயம் கேட்டு பேசுவார் என்று சொல்கிறார். இருந்தாலும் முத்துவால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காக மீனா முத்துமிடம் நீங்கள் தேவையில்லாமல் எங்கேயும் கோபப்படக்கூடாது என்று கேட்கிறார்.

உடனே முத்து எனக்கு எந்த அவமானம் வந்தாலும் நான் கோபப்பட மாட்டேன். அதே நேரத்தில் என் அப்பாவுக்கு ஒரு சின்ன அசிங்கம் ஏற்பட்டாலும் அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்ததாக ரோகினி அவருடைய தோழியிடம் என் மாமியார் நடக்கப் போகிற தாலி பெருக்கு பங்க்ஷனுக்கு என் அப்பா கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அதனால் இதை எல்லாம் சமாளிக்கும் விதமாக நான் வேற பிளான் வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். அதாவது இதையெல்லாம் மறந்து வேறு ஒரு பிரச்சனையில் அனைவரும் இருக்கும் அளவிற்கு ஒரு சம்பவம் செய்ய வேண்டும். அதற்கு தான் எங்கள் வீட்டில் ஒரு பலிக்காடாக முத்து இருக்கிறார்.

இவரை வைத்து பிரச்சனையை உண்டாக்கி அனைவரையும் திசை திருப்பப் போகிறேன் என்று ரோகிணி பிளான் பண்ண போகிறார். இந்த நேரத்தில் தாலி செயின் வாங்குவதற்காக ரோகிணி அம்மா பணம் கொண்டு வந்து கொடுக்கிறார். இதனைத் தொடர்ந்து தாலி பெருக்கு பங்க்ஷன் ஆரம்பமாகப் போகிறது. அங்கே முத்துவும் மீனவும் போகிறார்கள்.

இவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ஸ்ருதியின் அப்பா அம்மா கொடுக்கிறார்கள். இதை அனைவரும் கவனித்து வருகிறார்கள். அதே நேரத்தில் அண்ணாமலை பக்கத்தில் சுருதி அப்பா ஒரு பணக்காரரே உட்கார வைக்கிறார். அவர் உட்காரும்பொழுது அண்ணாமலையே சீண்டிப் பார்க்கும் விதமாக ஷூ காலை நீட்டிக்கொண்டு அசிங்கப்படுத்தும் விதமாக வேண்டுமென்றே பண்ணுகிறார்.

இதனை பார்த்த முத்து கோபத்தில் கொந்தளிக்க போகிறார். ஆகமொத்தத்தில் இந்த ஒரு விஷயம் மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் அந்த நிகழ்ச்சியில் நடைபெறப் போவதால் முத்து மூலம் ஏதாவது ஒரு பிரச்சினை ஆரம்பமாக போகிறது. இதனால் ரோகிணி மற்றும் சுருதியின் அப்பா அம்மா சந்தோஷத்தில் ஆட போகிறார்கள்.

ஆனால் இந்த நேரத்தில் சரியாக சுருதி மட்டும் பயன்படுத்தி முத்துவுக்கு சப்போர்ட்டாக பேசினால் எல்லாமே தலைகீழாக மாறி நாடகம் பார்ப்பதற்கு இன்னும் சுறுசுறுப்பாக அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Trending News