Thalaivar 171: ரஜினி, லோகேஷ் கூட்டணியின் தலைவர் 171 தான் இப்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஆனால் அதற்கு முன்பாகவே படத்திலிருந்து பல அப்டேட்டுகள் கசிந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற பட்டியலும் வெளியாகி உள்ளது.
ஆனால் எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமான அப்டேட் வந்தால் தான் முடிவாகும். அதன்படி தலைவர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் தகவல் பெரும் ஆர்வத்தை கிளப்பி இருந்தது.
தலைவர் 171ல் இணைந்த பிரபலங்கள்
ஆனால் தற்போது அவர் அதிலிருந்து விலகி அந்த கேரக்டருக்கு ரன்வீர் சிங் தேர்வாகியுள்ளார். தமிழில் முதன்முதலாக களமிறங்கும் இவர் இப்படத்திற்கு பின் இங்கு பிஸியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அதை அடுத்து ரஜினியின் சிஷ்யன் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார். அதேபோல் சுருதிஹாசன், சத்யராஜ் ஆகியோரும் இருக்கின்றனர். இதில் சத்யராஜ் இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியம்தான்.
ஏனென்றால் தலைவருக்கும் இவருக்கும் இருக்கும் மனஸ்தாபம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் லோகேஷ் சூப்பர் ஸ்டாருக்காக எப்படியோ சத்யராஜை சம்மதிக்க வைத்திருக்கிறார்.
லோகேஷின் சர்ப்ரைஸ்
இப்படியாக தலைவர் 171 படு மிரட்டலாக உருவாக இருக்கிறது. ஆனால் இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு.
தற்போது நட்சத்திரங்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு சீக்ரெட் இருக்கிறது. அதன்படி யாரும் எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரம் கேமியோ ரோலில் வர இருக்கிறதாம்.
அது ஆண்டவராக கூட இருக்கலாம். மேலும் சூப்பர் ஸ்டாரின் இதனை வருட திரை வாழ்க்கையில் இப்படத்தை அவருக்கான சமர்ப்பணமாக கொடுக்கவும் லோகேஷ் தயாராகி இருக்கிறாராம்.