செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

இது மட்டும் நடந்தால் கட்சியை கலைத்து விடுவேன்.. அண்ணாமலைக்கு பகிரங்கமாய் சவால் விட்ட சீமான்  

Seeman: தமிழகத்தில் 2024 ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் அதன் முடிவுகள்  ஜூன் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .இந்நிலையில் தான் சீமான் நாம் தமிழர் கட்சி சார்பாக சி.பா ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவிக்க எழும்பூர் வந்திருந்தார். அப்பொழுது பத்திரிகையாளர் கேட்ட கேள்வி ஒன்று அவரை பெரிதும் பாதித்தது.

தென் மாவட்டங்களில் பாஜகவின் ஆதிக்கம் பெருகி வருகிறது. அவர்கள் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக உருவாகி வருகிறார்கள் என மேடைக்கு மேடை அண்ணாமலை பேசி வருகிறார். பாஜகவால் தான் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அதன் முழு சலுகைகளாலும் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள் என்று எல்லா இடத்திலும் பேசுகிறார்  . 

அது மட்டும் இன்றி பாஜக தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்றும் பேசி வருகிறார் அண்ணாமலை. இப்படி வாய் கிளியே பேசும் அண்ணாமலை தேர்தல் நடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஏன் பேச தவறிவிட்டார் எ என்று கேள்வி எழுப்புகிறார் சீமான்.

அண்ணாமலைக்கு பகிரங்கமாய் சவால் விட்ட சீமான்  

 அது மட்டும் இன்றி நாம் தமிழர் கட்சி தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி. தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயங்களை மட்டும் இல்லை  வெளி மண்ணில் நடக்கும் எல்லா கெட்ட விஷயங்களையும் பார்த்துக் தட்டிக் கேட்கும் ஒரே கட்சி எங்கள் கட்சி தான் என்று ஆர்ப்பரித்தார். 

ஜூன் 5ஆம் தேதி தமிழகத்தில் எந்த கட்சி மூன்றாவது கட்சி என தெரிந்துவிடும். பாஜக எங்கள் கட்சியை விட அதிக வாக்குகள் பெற்றால் நான் கட்சியை கலைத்து விடுகிறேன்.

அப்போது தெரிந்துவிடும் மூன்றாவது இடத்தில  இருக்கும் சிங்கம் யார் என்று. கூட்டணி போட்டு ஜெயிப்பதெல்லாம் ஒரு வெற்றியை கிடையாது தனித்து நின்று பாஜக வெல்ல வேண்டும் என கோவமாய் பேசினார் சீமான்.

- Advertisement -spot_img

Trending News