சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மயக்க மருந்து, பூசாரி செய்த லீலைகள் அம்பலம்.. தலைமறைவான காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கைது

Chennai: கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்திய சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தொகுப்பாளினி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தொகுப்பாளினி விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரியான கார்த்திக் முனுசாமி தன்னை மோசம் செய்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

கோவிலுக்கு வந்த தொகுப்பாளினிடம் நட்பாக பழகிய அவர் வீட்டில் விட்டு விடுவதாக கூறி காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை உடல் ரீதியாக பயன்படுத்தியிருக்கிறார்.

கைதான கார்த்திக் முனுசாமி

சுயநினைவு திரும்பிய தொகுப்பாளினி இது குறித்து கேட்டபோது திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்கு கொடுத்து இருக்கிறார். ஆனால் அதன் பிறகு தொகுப்பாளினியை கார்த்திக் மிரட்டியதாகவும் தற்போது தனக்கு நியாயம் வேண்டும் எனவும் அவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் கார்த்திக் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரின் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் பூசாரி தலைமறைவானதை அடுத்து போலீஸ் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர். தற்போது தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கொடைக்கானலில் அவரை காவல்துறை கைது செய்துள்ளது.

அவரிடம் இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள்

Trending News