Sarathkumar: சரத்குமார் தற்போது குணச்சித்திர கேரக்டர்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் போர்த்தொழில், பரம்பொருள் ஆகிய படங்கள் அதிக கவனம் பெற்றன.
அதை அடுத்து தற்போது கிரிமினல், நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் அரசியலிலும் பிஸியாக இருக்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இவர் தன்னுடைய கட்சியை பிஜேபியுடன் இணைத்து இருந்தார்.
அது கடும் விமர்சனங்களை கிளப்பிய நிலையில் ராதிகாவுக்கு எம்பி சீட் கொடுக்கப்பட்டதும் சர்ச்சையானது. இந்நிலையில் தன் மனைவி இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என சரத்குமார் கோவிலில் அங்க பிரதக்ஷணம் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரத்குமாரின் வேண்டுதல்
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து வரும் நிலையில் சரத்குமாரின் இந்த வேண்டுதலும் வைரல் ஆகி வருகிறது.
Sarathkumar
Radhika
Vijaya Prabhakaran
Vijayakanth
அதன்படி ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். அதே தொகுதியில் தான் கேப்டனின் மகன் விஜய பிரபாகரனும் போட்டியிட்டார். இதனாலேயே இந்த தொகுதி அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சரத்குமார் விருதுநகரில் இருக்கும் பராசக்தி மாரியம்மன் கோவிலில் அங்க பிரதக்ஷணம் செய்தார். அந்த வீடியோ தற்போது மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் வாய்ப்பில்லை. என்ன தான் உருண்டு புரண்டாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும் என கிண்டலடித்து வருகின்றனர்.