Vignesh sivan and Nayanthara: விக்னேஷ் சிவன் இயக்கி வரும் LIC படத்தின் அப்டேட் வருதோ இல்லையோ, அடிக்கடி குடும்ப புகைப்படத்தை மட்டும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையிலான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரொமாண்டிக் புகைப்படங்கள், குழந்தைகளின் போட்டோஸ், ஊர் உலகத்தை சுற்றும் புகைப்படங்கள் என வந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் இப்போது மகன்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படத்தை விக்கி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதிலும் நயன்தாராவை கண்ணாடி முன் நிப்பாட்டி செல்பி எடுத்து அதை வர்ணிக்கும் வகையில் அழகூரில் பூத்தவளே என்னுடைய நயன் என்று ஹார்ட் சிம்பலை போட்டு தெறிக்க விட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் நயன் ஒரு வெள்ளை சட்டை மற்றும் நீல நிற டெனிம் ஷார்ட்ஸ் அணிந்திருக்கிறார்.
விக்கியை சொக்க வைத்த நயன்தாரா
அத்துடன் இரண்டு மகன்கள் ஆன உயிர் மற்றும் உலகம் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். கருப்பு டி-ஷர்ட் மற்றும் ஆரஞ்சு நிற கால் சட்டையுடன் ஆடைகளை அணிந்து விக்னேஷ் உடன் விளையாடுவதை மகிழ்ச்சியுடன் போட்டிருக்கிறார். அவர்களை அழகான மற்றும் முடிவில்லா ஆசீர்வாதம் என சந்தோசமான தருணங்களை விக்கி பகிர்ந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து விக்கி இரண்டு குழந்தைகளுடன் வெளியே விளையாடுவதை நயன் அவருடைய இன்ஸ்டாகிராம் கதையில் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு மூன்று இதயங்கள் உள்ள இமேஜ்களை போட்டிருக்கிறார். தற்போது நயன்தாரா Test, 1960 முதல் மண்ணாங்கட்டி, அன்புள்ள மாணவர்களே, தனி ஒருவன் 2 போன்ற 10 படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.
அதே மாதிரி விக்னேஷ் சிவன், பிரதிப்பை வைத்து எல்ஐசி படத்தையும் பிசியாக இயக்கிக் கொண்டு வருகிறார். இப்படி இரண்டு பேருமே பிசியாக இருக்கும் வேலையில் கூட அடிக்கடி குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் விதமாக மகன்களுடன் விளையாடிக் கொண்டு அவர்களுக்கு என்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வருவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படங்கள்
- Nayanthara: ஜோடியாக திருச்செந்தூர் முருகனை காண வந்த மூக்குத்தி அம்மன்
- Nayanthara: குழந்தையை பங்கு போட்டுக் கொண்ட விக்கி, நயன் ஜோடி
- தாய் பாசத்தில் தெரேசாவை மிஞ்சிய நயன்தாரா