ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

6 மாசம் உங்க சங்கார்த்தமே வேண்டாம், லண்டன் செல்லும் அண்ணாமலை.. அடுத்த பிஜேபி பொறுப்பு யாருக்கு தெரியுமா?

Annamalai: தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. இதனால் துவண்டு போயிருக்கும் மேல் இடத்தில் அடுத்த கட்ட முன்னேற்றத்தை எப்படி அடையலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அண்ணாமலை எடுத்த முடிவு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியல் படிப்புக்காக ஆறு மாதத்திற்கு லண்டன் போய் படிப்பதற்காக முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் இறுதியில் லண்டன் போவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இன்னொரு பக்கம் இதைப் பற்றி டெல்லியில் அண்ணாமலை முடிவுக்கு எந்தவித பதிலும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள்.

அரசியல் படிக்க ஆறு மாதம் ஓய்வு எடுக்கும் அண்ணாமலை

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 12 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். அதில் அண்ணாமலையும் ஒருவர். அதனால் ஆறு மாதமாக லண்டனில் தங்கி இருந்து படிக்கப் போகிறார். ஏற்கனவே தமிழகத்தில் பாஜக கட்சி ரொம்பவே தோய்வான நிலையில் இருப்பதால் அண்ணாமலை இந்த நேரத்தில் கிளம்பும் சமயம் கட்சி ரொம்பவே வலுவடைந்து விடலாம் என்ற ஒரு கேள்விக்குறி ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

அதனால் இன்னொரு மாற்று கருத்தையும் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருநாள் முதலமைச்சர் மாதிரி ஆறு மாதம் பாஜக தலைவராக பொறுப்பை வேறு ஒருவர் ஏற்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது. அந்த வகையில் அண்ணாமலை இடத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் வரவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி இருக்கிறார்.

ஆனால் என்ன பேசினார்கள் என்று இப்பொழுது வரை எந்த தகவலும் வெளிவரவில்லை. ஒருவேளை இது விஷயமாக பேசி கூட தமிழிசை ஆறு மாதத்திற்கு தமிழகத்தில் பொறுப்பேற்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த தகவல் கசிந்த நிலையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தமிழிசை வருவதை மறுத்து வருகின்றனர். இதற்கு முன்னதாகவும் அண்ணாமலை இந்த மாதிரி மூன்று மாதம் லண்டன் சென்று இருக்கிறார்.

அப்போது கூட புதிய தலைவர் யாரும் நியமிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது இப்ப மட்டும் ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று மாற்று கருத்துக்கள் வந்து கொண்டே வருகிறது. இது சம்பந்தமாக கூடிய விரைவில் மேலிடத்திலிருந்து ஒரு முடிவெடுத்து அண்ணாமலைக்கு சாதகமாக அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் நடிகர் விஜய் சமீபத்தில் மாணவர்கள் சந்தித்த விழாவில் நல்ல படித்து அரசியல் தெரிந்த நபர் ஆட்சி புரிந்தால் தமிழகம் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். அதன்படி அரசியலைப் பற்றி நன்கு கரைத்துக் குடித்து தெரிந்து கொள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கப் போகிறார் அண்ணாமலை. இனி யாரும் அண்ணாமலையை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க முடியாது.

பாஜக பற்றி சுட சுட தகவல்கள்

Trending News