வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கமலை எதிர்த்து தில்லாக போட்டியிட்ட பார்த்திபன்.. விரித்த வலையில் சிக்கிய இந்தியன் 2, தோற்றுப் போன ஆண்டவர்

Parthiban: கமலுக்கு விக்ரம் படத்துக்கு பிறகு கிடைத்த வெற்றி அவரை ஆகா ஓகோ என்று சொல்லி உலகநாயகன் கம்பேக் கொடுத்து விட்டார் என ஓவராக புகழ்ந்து தள்ளப்பட்டது. ஆனால் அதற்கு எதுக்குமே நான் ஒர்த் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப இந்தியன் 2 படத்தின் மூலம் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவிட்டது. அந்த வகையில் விக்ரம் படத்தின் மூலம் கமலுக்கு கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணம் லோகேஷ்.

இதன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை வெற்றியாக கொடுப்பார் என்று கமல் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் ஏற்கனவே இந்தியன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதனாலும் இந்தியன் 2 இந்த வருஷத்தில் அதிக வசூலை பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிப் போன நிலையில் ஜூலை 12ஆம் தேதி வெளிவந்த இந்தியன் 2 ரசிகர்களிடம் மோசமான விமர்சனத்தை பெற்று விட்டது.

ஃபெயிலியர் படமாக முத்திரை குத்தப்பட்ட இந்தியன் 2

இதற்கிடையில் இந்தியன் 2 படம் ஜூலை 12ஆம் தேதி வெளி வருகிறது என்று அறிவிப்பு வந்த பிறகு பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் படமும் அதே நாளில் தான் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் எதற்காக பார்த்திபன் கமலுடன் மோதுகிறார். அதுவும் இந்தியன் படம் எந்த அளவிற்கு மக்களிடம் ரீச் அடைந்திருக்கிறது என்று தெரிந்தும் ஏன் ரிஸ்க் எடுக்கிறார் என்று பல விமர்சனங்கள் பார்ப்பதன் மீது வைக்கப்பட்டது.

ஆனால் அது எதையும் கண்டு கொள்ளாத பார்த்திபன் என்னுடைய கதை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் நான் தில்லாக வெளியிடுவேன் என்று ஒரே நாளில் வெளியிட்டார். அதுவும் இந்த படம் கண்டிப்பாக எல்லா மக்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக 100 ரூபாய் என டிக்கெட் ரேட்டை குறைத்துக் கொண்டு வெளியிட்டார்.

என்ன தைரியத்தில் இந்த ரிஸ்க் எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் பார்த்திபன் நினைத்தபடி இந்தியன் 2வை சுக்குநூறாக உடைத்து டீன்ஸ் படத்தின் மூலம் வெற்றி பெற்றுவிட்டார். இதை தான் சின்ன மீனை போட்டு பெரிய மீனுக்கு தூண்டில் போடுவது. அந்த வகையில் பார்த்திபனின் ராஜதந்திரம் அத்தனையும் வீண் போகவில்லை என்பதற்கு ஏற்ப இவரிடம் அப்பட்டமாக கமல் தோற்றுப் போய் விட்டார்.

இதனை தொடர்ந்து தற்போது டீன்ஸ் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தின் மூலம் பார்த்திபனின் மகள் கீர்த்தனா, கிரியேட்டிவ் ப்ரோடுசராக பணி புரிந்திருக்கிறார். இதை கொண்டாடும் விதமாக டீன்ஸ் படத்தின் மொத்த டீமும் அன்பு இல்லத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சென்னை காசி டாக்கீஸ் திரையரங்கில் வெற்றியை கொண்டாடி இருக்கிறார்கள்.

இந்த வெற்றி விழாவில் இசையமைப்பாளர் டி. இமான், இயக்குனர் பிரபு சாலமன் மற்றும் இப்படத்தில் நடித்த 13 குழந்தைகளும் கேக் வெட்டி படக்குழுவினர்கள் சேர்ந்து ஒட்டுமொத்த சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் பல வருடங்களுக்கு பிறகு குழந்தைகளுக்காக குடும்பத்தினருடன் ரசிக்கும்படியான ஒரு படத்தை எடுத்த இயக்குனர் பார்த்திபனுக்கு பிரபு சாலமன் அவருடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து நல்ல கதையை கொடுத்ததற்கு நன்றியையும் கூறியிருக்கிறார். இப்படத்துடன் போட்டி போட்ட கமலின் இந்தியன் 2 படம் இன்னும் போட்ட காசை கூட எடுக்க முடியாமல் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள்

Trending News