1. Home
  2. கோலிவுட்

விஜய் சேதுபதி படத்தில் வெயிட்டான கேரக்டர்.. ஆசானுக்கு வாய்ப்பு கொடுத்த மக்கள் செல்வன்

விஜய் சேதுபதி படத்தில் வெயிட்டான கேரக்டர்.. ஆசானுக்கு வாய்ப்பு கொடுத்த மக்கள் செல்வன்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி மீண்டும் பழைய ஸ்பீடு உடன் தனது வேலையை செய்து வருகிறார். மகாராஜா படம் மாபெரும் ஹிட் கொடுத்த நிலையில் தன்னுடைய அடுத்த பட வேலைகள் முமரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் அடுத்ததாக பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க வேறு பெரிய ஹீரோக்களை தேர்ந்தெடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

அந்த சமயத்தில் இந்த கேரக்டருக்கு மிஸ்கின் நடித்தால் நன்றாக இருக்கும் என விஜய் சேதுபதி கூறியிருக்கிறார். பிசாசு 2 படத்தில் இருந்து இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நல்ல சுமூக உறவு இருந்து வருகிறது. மிஷ்கினின் பிறந்த நாளுக்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்து போது மென கெட்டு சென்னை வந்த சென்றார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் இயக்குனர்

மிஷ்கினை தனது ஆசான் போல விஜய் சேதுபதி பார்த்து வருகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் இப்போது நடிகர் மற்றும் இசையமைப்பாளராக மிஷ்கின் கலக்கி கொண்டிருக்கிறார். லியோ, மாவீரன் போன்ற படங்களில் மிஷ்கின் அசத்தி இருந்தார்.

அடுத்ததாக பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வணங்கான் படத்திலும் மிஷ்கின் நடித்து உள்ளாராம். இப்போது விஜய் சேதுபதி தனது படத்தில் நடிக்க அழைத்த போது உடனடியாக சம்மதித்து விட்டாராம்.

அதோடு மட்டுமல்லாமல் கதை டிஸ்கஸனில் கூட இப்போது பாண்டிராஜுடன் மிஷ்கின் பங்கு பெற்று வருகிறாராம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மேலும் மிஸ்கின் மற்றும் விஜய் சேதுபதி காம்பினேஷனுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.