சிம்பு தற்போது கைவசம் படங்கள் இல்லாமல் அல் லோலபட்டு வருகிறார். கடைசி வரை எஸ்டிஆர் 48 படம் பண்றோம் என கமல் நம்ப வைத்து மோசம் செய்து விட்டார், இப்பொழுது ஆண்டவரை நம்பினால் பிரயோஜனம் இல்லை என சிம்புவே களத்தில் இறக்கி விட்டார்.
மலையாள சினிமாவை புரட்டி போட்ட படம் “2018” இந்த படத்தின் இயக்குனர் ஆண்டனி ஜோசப். சிம்புவிற்கு ஒரு கதை சொல்லி இருக்கிறார். நல்ல கதை என்று இந்த படத்தை சிம்பு பண்ணலாம் என்ற முடிவில் இருக்கிறார். அதற்காக லைக்காவிடம் கமிட்டாகி இருந்தார் லைக்காவிற்கு இருக்கும் பண பிரச்சனையால் இப்பொழுது அவர்கள் இந்த படத்தில் இருந்து ஜகா வாங்கி விட்டார்கள்.
அடுத்தபடியாக ஐசரி கணேசிடம் தஞ்சமடைந்தார் சிம்பு. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடிகளாம் அதுபோக சிம்பு கூட பெரும் தொகையை சம்பளமாக கேட்கிறார். இதனால் வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேசும் இந்த படத்தை கைவிட்டு விட்டார். ஆனால் படத்தின் கதையால் கவரப்பட்ட சிம்பு இதனை விட்டுக் கொடுப்பதாக இல்லை.
ஐசரி கணேஷ் விரட்டியதால் பறந்த தூது புறா
தனது நண்பர் மற்றும் நடிகரான மகத் மூலம் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தூது விட்டிருக்கிறார். அவர்களும் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கிறது. நீங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தியும் சிம்பு உடன்படவில்லை.
யாரும் வேண்டாம் என இப்பொழுது தெலுங்கு தயாரிப்பாளர்தில்ராஜிடம் மகத்தை தூது அனுப்பி இருக்கிறார். தில்ராஜ் பணத்தை பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். ஆனால் இது தமிழ் படம். தில்ராஜுக்கு ஏற்கனவே தமிழ் படங்கள் பண்ணுவதில் சிக்கல் உள்ளது. அக்கடதேசத்தில் அவருக்கு தமிழ் படம் தயாரிப்பதில் எதிர்வலைகள் கிளம்பியுள்ளது.