ஒரு வருடம் விலகி இருக்க அஜித் முடிவு.. சிறுத்தை சிவாவால் ஏற்பட்ட விபரீதம்

Ajith: அஜித் நடிப்பில் எப்போதோ தொடங்கப்பட்ட விடாமுயற்சி ஒரு வழியாக இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட லைக்கா தீவிரம் காட்டி வருகிறது.

அதே போல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி அடுத்த வருட பொங்கலை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. அதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படங்களை முடித்த பிறகு அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு அடுத்து மோகன் ராஜா, எச் வினோத் ஆகியோர் லைனில் இருக்கின்றனர். ஆனால் சிறுத்தை சிவா கங்குவா 2 படத்தை முடித்துவிட்டு தான் அஜித்தை இயக்குவார்.

அதேபோல் மோகன் ராஜா தனி ஒருவன் 2 படத்தை முடிக்க வேண்டும். எச் வினோத் விஜய்யின் கடைசி படத்தை இயக்க இருக்கிறார். இதனால் அஜித் இன்னும் சில காலம் இவர்கள் வருகைக்காக காத்திருக்க வேண்டும்.

அஜித்தை காக்க வைக்கும் சிறுத்தை சிவா

அதிலும் சிறுத்தை சிவா உடன் இணைய ஒரு வருடம் ஆகிவிடும். அதனால் அவர் அந்த இடைப்பட்ட கேப்பில் தன் சொந்த வேலைகளை முடித்து விட இருக்கிறாராம். அதாவது அஜித்துக்கு சில உடல்நல பிரச்சனைகள் இருக்கிறது.

அதற்காக சமீபத்தில் கூட அவர் சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அது அனைத்தும் தற்காலிகமான சிகிச்சை தான். அதன் காரணமாக அவருக்கு சில சிரமங்களும் ஏற்பட்டு வருகிறது.

தற்போது சிறுதை சிவா தாமதம் செய்வதால் தன்னுடைய சிகிச்சையில் அவர் கவனம் செலுத்த இருக்கிறார். இப்பொழுதுதான் அவருக்கு முழு ஆபரேஷன் நடக்க இருக்கிறதாம். இதனால் ஒரு வருடம் நடிப்புக்கு பிரேக் விடும் அஜித் புத்துணர்ச்சியோடு களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்புக்கு பிரேக் விட அஜித் முடிவு

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்