புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நாளையுடன் முடிவுக்கு வரும் முக்கியமான 3 சீரியல்கள்.. அண்ணன் தங்கை பாசத்திற்கு பூசணிக்காய் உடைத்த இயக்குனர்

Serials: சின்னத்திரை மூலம் மெகா தொடராக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் குடும்பத்துடன் பார்க்கும் படியாக இருப்பதால் ஒவ்வொரு சேனலும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பதற்காக முந்திக் கொண்டு வருகிறார்கள். சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றது.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கிட்டத்தட்ட 1100 எபிசோடுக்கு மேல் வெற்றிகரமாக நெருங்கி விட்டது. இந்நிலையில் எப்பொழுதுமே அண்ணன் தங்கை பாசத்தில் யாராலயும் மிஞ்சிட முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப சின்ராஸ் மற்றும் துளசி அன்பு ஜெயித்து விட்டது.

வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் மூன்று முடிச்சு சீரியல்

இவர்களைப் பிரித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்த பொன்னி கடைசியில் திருந்தி குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார்.

அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே கிளைமாக்ஸ் காட்சி திருப்திகரமாக இருக்கிறது என்றால் வானத்தைப்போல சீரியல் தான் என்று சொல்லும் அளவிற்கு மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. மேலும் நாளையுடன் வானத்தைப்போல சீரியல் முடிய போகிறது. இதற்கு பதிலாக புத்தம் புது சீரியல் ஆன மூன்று முடிச்சு நாடகம் ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சண்டைக்கோழி சீரியலும் நாளையுடன் முடியப் போகின்றது. கிட்டத்தட்ட 350 எபிசோடுகளை நெருங்கிய இந்த சீரியல் விக்ரம் மற்றும் காவிரி ரொமான்ஸ் நடிப்பு அனைவரையும் கவர்ந்து விட்டது. இந்த சீரியலுக்கும் மக்கள் அமோக வரவேற்பு கொடுத்த நிலையில் திருப்தியான கிளைமேக்ஸ் காட்சியுடன் நாளை முடிவுக்கு வந்துவிட்டது.

அடுத்ததாக கௌதம் மற்றும் இந்திரா நடித்து வந்து சீரியல் ஆன இந்திரா நாடகமும் நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது. கிட்டத்தட்ட இந்த நாடகம் ஆரம்பித்து 500 எபிசோடுகளை தாண்டிய நிலையில் மக்களின் பேவரைட் சீரியலாக இந்திரா நாடகம் இடம் பிடித்தது.

தற்போது ராகினி போட்ட பிளான் எதுவும் இந்திரா கிட்ட பலிக்காது என்று சொல்வதற்கு ஏற்ப அனைத்து சதிகளையும் முறியடித்து ஒரு நல்ல மனைவியாகவும் மருமகளாகவும் ஜெயித்துக் காட்டிவிட்டார். ஜீ தமிழில் இந்த இரண்டு நாடகங்களும் முடிய போவதால் இதற்கு பதிலாக புத்தம் புது சீரியல் கூடிய விரைவில் வர இருக்கிறது.

Trending News