ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

என் பாட்டியையும் விட்டு வைக்கல.. அடேய்! எல்லை மீறி போறீங்கடா? கடுப்பான வைரமுத்து கொடுத்த நறுக் பதில்

தமிழ் சினிமா பாடல்களில் தவிர்க்கவே முடியாதவர் வைரமுத்து. இதுவரை 7000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் அவர் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 7 தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். இளைய பாடலாசிரியர்களுக்கு போட்டியாக இப்போதும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் வைரமுத்து.

கவிஞர் வைரமுத்து தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசன், வாலிக்கு அடுத்தபடியாக பெரும்பாலான ரசிகர்களால் தமிழ் திரையுலகில் கொண்டாடப்படுகிறார். மண் மணம் மாறாத கவிகளுக்குச் சொந்தக்காரான இவர். இவர் புகழுக்கு மட்டுமல்ல சர்ச்சைக்கும் பெயர் போனவர். மீ டூ புகாரை தொடர்ந்து, அவ்வப்போது சர்ச்சைக்குள் சிக்குவார்.

அப்படி தான் சமீபத்தில் பாடகி சுசித்ரா வைரமுத்து பற்றி பகீர் கிளப்பியிருந்தார். மேலும் தனது பாட்டிக்கு கூட pantene ஷாம்பூ வாங்கி கொடுத்தார் என்று சொல்லி இருந்தார். எப்போதும் தன்னை பற்றிய சர்ச்சைகளை கண்டும் காணாமல் இருக்கும் வைரமுத்து தற்போது சுசித்ரா குற்றச்சாட்டுக்கு ரியாக்ட் செய்யும் விதமாக ட்வீட் போட்டுள்ளார்.

அதில், ” வாழ்வியல் தோல்விகளாலும், பலவீனமான இதயத்தாலும், நிறைவேறாத ஆசைகளாலும், மன அழுத்தத்திற்கு உள்ளாகி, அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்; தொடர்பற்ற மொழிகள் பேசுவர்.

பைத்தியம்போல் சிலநேரமும், பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும், காட்சியளிப்பர். தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர். இந்த நோய்க்கு ‘Messianic Delusional Disorder’ என்று பெயர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள்.

உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு, உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்”- என்று குறிப்பிட்டுள்ளார். இதற்க்கு நெட்டிசன்கள், “அவர் மனநோயாளியாகவே இருக்கட்டும். நீங்கள் உத்தமர்.. அப்படி தானே?” என்று நக்கல் செய்து வருகின்றனர்.

Trending News