வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ரூம் போட்டு யோசிப்பாங்களோ.! மனுஷன விட இது ஸ்மார்ட் ஆ இருக்கே!

நம்ம போயி திருடினா மாட்டிப்போம். இது சரி பட்டு வராது. நமக்கு ஒரு அசிஸ்டன்ட் வேணும். அந்த அசிஸ்டன்ட் திருடிட்டு வரட்டும். நம்ம சாப்பிட்டு தூங்கி சந்தோஷமா இருப்போம். அந்த அசிஸ்டன்ட் மாட்டினா கூட நம்ம பெயரை சொல்லமுடியாத ஒரு ஆளாக இருக்கணும்.. என்ன பண்ணலாம்.. இப்படி எல்லாம் ரூம் போட்டு யோசித்து ஒருவர் நூதன முறையில் திருடியுள்ளார்.

கர்நாடகாவில் சுமார் 50 வீடுகளில் புகுந்து கொள்ளையை அரங்கேற்றிய நபரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர் எப்படி? ஆட்கள் இல்லாத வீடுகளை தேர்ந்தெடுத்து அந்த நபர் திருடிச் செல்கிறார் என்று போலீசார் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இந்த திருட்டில் சம்மந்தப்பட்டவரை தேடுவதில் போலீஸ் க்கு பல குழப்பங்கள் ஏற்பட்டது. யார் தான் இப்படி, தெளிவாக திருடியிருப்பர்? ஒரு துப்பு கூட கிடைக்கவில்லையே என்று புலம்பி கொண்டிருந்தனர்..

கேம் சேஞ்சராக மாறிய புறா

ஒருநாள் அந்த கொள்ளையன் மஞ்சுநாதன் மாட்டிக்கொண்டார். அவரிடம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்களை மஞ்சுநாதன் தெரிவித்தான். சென்சிடிவ்வான உணர்திறன் கொண்ட புறாக்கள் பொதுவாக அருகில் ஆட்கள் வந்தால் உடனே பறந்து விடும் தன்மை கொண்டது.

புறாக்களின் இந்த தன்மையை பயன்படுத்தி கொள்ளையடிக்க திட்டமிட்ட மஞ்சுநாதன், ஒவ்வொரு முறை கொள்ளையடிக்க செல்லும்போதும், புறாக்களை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம். கொள்ளைக்கு முன் வீடுகளை நோட்டமிடும் மஞ்சுநாதன், ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் மீது 2 புறாக்களை பறக்க விடுவார். அவை பெரும்பாலும் கூரை அல்லது பால்கனிக்கு பறந்து சென்று அமர்ந்து சத்தமிடும்.

அப்போது வீட்டுக்குள் ஆட்களின் நடமாட்டம் இருந்தால் உடனே பறந்து விடும். அதே நேரம் வீட்டுக்குள்ள ஆட்கள் இல்லையென்றால் அங்கையே இருக்கும். இதை வைத்து வீட்டுக்குள் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் மஞ்சுநாதன் தான் கையோடு எடுத்து வரும் இரும்பு ராடைக் கொண்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து வெற்றிகரமாக கொள்ளையடித்து வந்துள்ளார்.

இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் என்னடா நீங்களும் இப்படி டெக்னாலஜி க்கு அப்டேட் ஆய்கிட்டே இருக்கீங்க. இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News