ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நஷ்டத்தால் ரஜினிக்கு கிடுக்குபிடி போட்ட லைக்கா.. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தலைவர் படும் பாடு

வேட்டையன் படம் கொடுத்த ஆரவார ஹிட்டால் ரஜினி டபுள் ஹேப்பி மூடில் இருக்கிறார். 20 வயது குறைந்தவர் போல் இன்னும் உற்சாகமாய் காணப்படுகிறாராம். இதற்கிடையே இந்த சந்தோஷத்தை அவருடன் வீட்டிற்கு சென்று பகிர்ந்துள்ளது லைக்கா நிறுவனம்.

இவர்களது உரையாடல் ஒரு மணி நேரம் நீடித்துள்ளது. ரஜினியிடம் சுபாஸ்கரன் நீண்ட நேரமாக பேசி உள்ளார். இந்த உரையாடலில் ரஜினி மிக சந்தோசமாக காணப்பட்டாராம். இதனிடையே ரஜினியிடம் லைக்கா நிறுவனம் கிடுக்குப்பிடியாய் ஒரு விஷயத்தை பேசி உள்ளது.

ரஜினியிடம்அந்த நிறுவனம் இன்னொரு படத்திற்கு டேட் கேட்கிறார்கள். ஏற்கனவே ரஜினி ஹிந்தி தயாரிப்பாளர் ஒருவருடன் படம் பண்ணுவதாக பேச்சு வார்த்தைகள் அடிபட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் வேல்ஸ் ஐசரி கணேஷ் உடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதாகவும் பேச்சுக்கள் போகிறது.

எல்லாத்தையும் தெரிந்து கொண்டு லைக்கா, ரஜினி மறுப்பு தெரிவிக்காத அளவிற்கு செக் வைத்துள்ளது. ரஜினி தங்கள் நிறுவனத்துக்கு நடித்துக் கொடுத்த படங்கள் பெரும்பாலும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், இந்த படம் தான் ஓரளவு வெற்றியை கொடுத்தது என்றும் கூறியிருக்கிறார்கள். அதுவும் மிகப்பெரிய அளவில் லாபம் ஒன்றும் இல்லை எனவும் பேசியிருக்கிறார்கள்.

2018ஆம் ஆண்டு மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட 2.0 படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும். அதன் பின் 2020 ஆம் ஆண்டு தர்பார் படத்திலும் நஷ்டம் வந்ததாகவும், மீண்டும் இப்பொழுது இந்த ஆண்டு வெளிவந்த லால் சலாம் படத்தின் மூலமும் நஷ்டம் தான்எனவும், அதனால் இன்னும் ஒரு படம் பண்ணிக் கொடுங்கள் என செக் வைத்துள்ளனர்.

- Advertisement -

Trending News