செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

அவன கொஞ்சம் நிறுத்துங்களேன் டா.! மீண்டும் ஒரு பஞ்சாயத்தில் சிக்கிய இர்பான்

பிரபல யூடியூபராக வலம் வருபவர் இர்பான். இவரது விடீயோக்களை பார்த்து, நடிகர் நெப்போலியனே இர்பானை அமெரிக்காவிலுள்ள தனது வீட்டிற்கே அழைத்து பாராட்டி இருப்பார். யூடியூபில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ செய்து வரும் இவர், பின்னாளில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று விதவிதகமான உணவுகளை சமைத்து அசத்தி வந்தார்.

முன்னதாக இவர், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியில் அறிவித்து பெரும் சர்ச்சைகளை சந்தித்தார். இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவது சட்டப்படி தவறு என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவர் வெளிநாட்டிற்கு சென்று இந்த பரிசோதனையை செய்திருக்கிறார்.

அந்த பஞ்சாயத்துக்கு முன், இரவு நேரத்தில் வேகமாக வண்டியை ஒற்றி, ஒருவர் மீது ஏறி, பெரும் பிரச்சனையாகி, அதிலிருந்து தப்பித்தார். இப்படி பிரச்சனைக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இவர், மீண்டும் வான்டட் ஆக ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். கண்டிப்பாக இந்த வீடியோ வெளியிட்டால், நூறு சதவீதம் பிரச்சனை வரும் என்பது அவருக்கு தெரியும்.

இதெல்லாமா விடியோவா போடுறது..

இவருக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர், தனது குழந்தை பிறக்கும் போது நடந்த அனைத்து விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து மை பிரின்ஸஸ் இஸ் ஹியர் எனும் தலைப்பில் யூடியூப் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ள போது, இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்தது தான் இப்போது பலரையும் பேச வைத்துள்ளது. இது மருத்துவ ரீதியாக சரியானதா? மருத்துவ துறையில் இதற்கு இடம் உள்ளதா? என்பது குறித்து மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனை கவனித்த ஊரக நலப்பணி இயக்குனர்‌ மருத்துவர்ஜெ.ராஜமூர்த்தி யூடியூபர் இர்பானிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க உள்ளோம். அதுமட்டுமின்றி, இந்த செயலுக்கு அனுமதி அளித்த , சம்மந்தப்பட்ட மருத்துவர்கள்‌ மீது மருத்துவ கவுன்சிலில்‌ புகாரளிக்க உள்ளோம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று தான் அந்த மருத்துவர்களை பார்த்து கேட்க தோன்றுகிறது. சாதாரண நபராக இருந்திருந்தால், இதை நீங்கள் செய்திருப்பீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த விடியோவை உடனடியாக நீக்க சொல்லியும் உத்தரவிட பட்டிருக்கிறது.

இது தவிர, ஒரு மனிதரின் வாழ்வில், எவ்வளவு முக்கியமான ஒரு நொடி அது, அப்போது கூட கன்டென்ட் ஆக அதை பார்க்கும் மனப்பான்மையை பார்க்கும்போது வருத்தமளிக்கிறது.

- Advertisement -spot_img

Trending News