புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

சாட்டையை சுழட்டி அடித்த விஜய்.. புதிய பாதையை ஆதரிக்கும் மக்கள்.. வேர்வையை துடைக்கும் மற்ற தலைவர்கள்

நேற்றைய தினம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு நடந்தது. திருவிழா போல நடந்த மாநாட்டை பற்றி தவறான செய்திகளை பரப்புவதில் ஒரு சில மீடியாக்கள் மும்முரம் காட்டியது. இருந்த போதிலும், மாஸ் ஆக என்ட்ரி கொடுத்த விஜய், தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்கள் மனதில் ஆழமாக பதியும் படி சொல்லி இருக்கிறார்.

அனல் பறக்க விஜய் பேசிய விஷயங்களில், முக்கியமாக பெரியாரை கொள்கைதலைவராக ஏற்கப்போவதாக கூறினார். அப்போ கடவுள் மறுப்பு கொள்கையா என கேள்வி வந்தபோது, “அதெல்லாம் கிடையாது. பெரியார் எங்கள் கொள்கைத்தலைவர் தான். பெரியாரின். கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுக்கப்போவதில்லை. அண்ணா சொன்ன ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான் எங்கள் கொள்கை..”

எந்த Team-ம் நான் கிடையாது..

“A TEAM, B TEAM என பிரித்து வீழ்த்தி விடலாம் என நினைத்து விடாதீர்கள். இங்கு யாராவது வந்து விடமாட்டார்களா? எதாவது செய்து விடமாட்டார்களா? என ஒரு ஏக்கத்தோடு நம்புகின்ற மக்களை ஏமாற்றும் ஊழல் கபடதாரிகளை நாம் ஜனநாயக போர்கலத்தில் சந்திக்கிற நாள் வெகு தூரத்தில் இல்லை.”

“பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என முடிவெடுத்தபோதே யார் எதிரி என முடிவெடுத்துவிட்டோம். ஒரு எதிரி பிளவுவாத சக்திகள், மற்றொரு எதிரி ஊழல் கபடதாரிகள்.” என விஜய் பேசியதற்கு ஆரவாரங்கள் எகிற, அவரது கொள்கைகளை கேட்டு இன்னும் அதிக மக்கள் ஆதரவாளராக மாறி உள்ளனர்.

எம்.ஜி.ஆர் க்கு கிடைத்த ஆரவாரங்கள், விஜய்காந்துக்கு கிடைத்த ஆரவாரங்கள் தற்போது விஜய்க்கு கிடைப்பதை பார்த்து மற்ற தலைவர்கள் வேர்வையை துடைத்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அங்கு கூடியது quarter-க்கும் கோழி பிரியாணிக்கும் கூடிய கூட்டமல்ல.

- Advertisement -spot_img

Trending News